For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கைதி 2 படத்துல கார்த்தி யாரு தெரியுமா? இயக்குநர் லோகேஷ் கனகராஜே ஸ்பாய்லர சொல்லிட்டாரே!

  |

  சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஏகப்பட்ட கைதி ரெஃபரன்ஸ் இருந்த நிலையில், கைதி 2 விரைவில் ரெடியாகப் போவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

  இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் அவரே வாய் தவறி முக்கியமான ஸ்பாய்லர் ஒன்றையும் போட்டு உடைத்திருக்கிறார்.

  கைதி படத்தில் கைதியாவதற்கு முன்னதாக டில்லி யாரு என்பதையும் எதிரிகளை அப்படி அவர் காலின் பலத்தால் அடித்து நொறுக்க என்ன காரணம் என்பது குறித்தும் தெளிவுப்படுத்தி உள்ளார்.

   கூட்டநெரிசலில் தவறி கீழே விழுந்த பவுன்சர்.. பதறிய நயன்தாரா.. இதுதாங்க உங்க ரசிகர் வட்டத்தோட சீக்ரெட்! கூட்டநெரிசலில் தவறி கீழே விழுந்த பவுன்சர்.. பதறிய நயன்தாரா.. இதுதாங்க உங்க ரசிகர் வட்டத்தோட சீக்ரெட்!

  கைதி

  கைதி

  மாநகரம் படத்தை இயக்கி யாருப்பா இந்த பையன் இளம் நடிகர்களை வைத்து இப்படியொரு பரபரப்பான படத்தை கொடுத்திருக்கிறாரே என பேச வைத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து ஒரே இரவில் நடைபெறும் சீட் எட்ஜ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக கைதி படத்தை கொடுத்து இந்தியளவில் பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

  பிகிலை பின்னுக்குத் தள்ளி

  பிகிலை பின்னுக்குத் தள்ளி

  விமர்சன ரீதியாக விஜய்யின் பிகில் படத்தையே பின்னுக்குத் தள்ளி மாஸ் காட்டியது கைதி. ஹீரோயின் இல்லை, புதிய பாடல்கள் இல்லை. ஒரே இரவில் நடக்கும் கதை. போலீசுக்கு உதவும் கைதி என படத்தில் ஏகப்பட்ட புதுமையான விஷயங்கள் இருந்தது தான் அந்த படம் அந்தளவுக்கு ஹிட் அடிக்கவே காரணம். பிகில் படத்தை விட கைதிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த விஜய் அடுத்த படமான மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பையே லோகேஷ் கனகாராஜுக்கு கொடுத்தார்.

  கைதி டச்

  கைதி டச்

  சமீபத்தில் வெளியாகி சரித்திர வெற்றி பெற்று வரும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஏகப்பட்ட கைதி டச் இடம்பெற்றுள்ளது. கிளைமேக்ஸில் டில்லியின் வாய்ஸ் மற்றும் அவரது மகளை காட்டும் காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்தன. மேலும், கைதி 2, விக்ரம் 3 படங்கள் உருவாகும் வாசல்களையும் திறந்து வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

  டில்லி யாரு தெரியுமா

  டில்லி யாரு தெரியுமா

  இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கைதி படத்தில் டில்லி 10 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்த கைதியாக நடித்திருப்பார். ஆனால், அவருடைய பேக் ஸ்டோரியில் அவர் யாரு தெரியுமா என்றும் அவரது கையில் உள்ள கட்டப் பையில் என்ன இருக்கும் என்பதை எடிட்டின் போது இன்னொரு கதையாக வாய்ப்பிருப்பதால் தான் தான் நீக்கி விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

  கபடி பிளேயர்

  கபடி பிளேயர்

  கைதி 2ம் பாகத்தில் கார்த்தி கபடி பிளேயராக வருவதை உறுதிப்படுத்தி விட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இப்படி ஸ்பாய்லரை இயக்குநரே சொல்வது கைதி 2வுக்கான புரமோஷனாக மாறும் என்பது ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார் என்பது லீக் ஆனதை போலத்தான் என்பது வேறு கதை. டில்லியின் கைப் பையில் அவர் ஜெயித்து வாங்கிய கோப்பைகள் இருக்கும் என்றார்.

  மாஸ்டரில் கபடி காட்சி

  மாஸ்டரில் கபடி காட்சி

  விஜய்யின் கில்லி படத்தில் வந்த தீம் மியூசிக் உடன் மாஸ்டர் படத்தில் கபடி விளையாட்டில் கலக்கி எடுத்திருப்பார் நடிகர் விஜய். அதிலும், அர்ஜுன் தாஸ் இருப்பார். விஜய் மற்றொரு சிறைக்கு மாற்றப்படுவது போன்ற காட்சியில் அந்த சிறைச்சாலையில் சிறந்த கபடி பிளேயராக டில்லியை கோர்த்து விட்டால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் திரைக்கதை வசனம் எழுதி வருகின்றனர்.

  டில்லி vs ரோலெக்ஸ்

  டில்லி vs ரோலெக்ஸ்

  கைதி 2ம் பாகம் உருவானால் அதில் டில்லி vs ரோலெக்ஸுக்கு சண்டைக் காட்சிகள் இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விக்ரம் 3 படத்தில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி மூவரும் இணைந்து நடிப்பார்கள் என்பது விக்ரம் படத்தின் கிளைமேக்ஸை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது. தளபதி 67ம் LCU வாக இருந்தால் தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் கற்பனை குதிரைகளை ஓட விட்டு வருகின்றனர்.

  English summary
  Director Lokesh Kanagaraj spill the beans about Kaithi 2 Karthi role in his recent interview. He also plans for Kaithi 2 and Vikram 3 soon.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X