லோகேஷ் கனகராஜ் கையில் கத்தி.. வாமிகா கபி கையில் காண்டம்.. DC பட டைட்டில் டீசர் இப்படி இருக்கே
சென்னை: கோலிவுட்டின் சக்சஸ்ஃபுல் இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இப்போது நடிகர் அவதாரமும் எடுத்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் DC படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி நல்ல பெயர் பெற்ற லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி மேற்கொண்டு பிரபலமடைந்தார். முதல் இரண்டு படங்களின் வெற்றி அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அந்தவகையில் விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ, கமலை வைத்து விக்ரம், ரஜினியை வைத்து கூலி படங்களை இயக்கினார்.
லோகேஷுக்கு முதல் சறுக்கல்: விக்ரம், மாஸ்டர் ஆகிய இரண்டு படங்களுமே அவரது பெயருக்கு பெரிய டேமஜை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. ஆனால் லியோ அவருக்கு முதல் சறுக்கலாக அமைந்தது. அதன் ஸ்க்ரீன் ப்ளே, போலியான ப்ளாஷ் பேக் என பலரும் லோகேஷை விமர்சிக்க தொடங்கினார். லியோவில் வாங்கிய அடியை கூலியில் சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அடி வாங்கிய கூலி: ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பலர் அந்தப் படத்தில் நடித்தார்கள்.கோலிவுட்டின் ஓவர் ஹைப் படங்களில் ஒன்றாக அது வெளிவந்தது. ஆனால் ரிசல்ட்டோ லியோவைவிட மோசமாக அமைந்தது. அந்தப் படம் வாங்கிய அடி கண்டிப்பாக லோகேஷ் கரியரில் பெரிய வடுவை கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. பலரும் அவரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றிவிட்டார்கள்.
நடிகர் அவதாரம்: இதற்கிடையே நடிகர் அவதாரமும் எடுத்தார் லோகி. முதலில் ஸ்ருதி ஹாசனுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்க வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கிறார். முதன்முறையாக லோகேஷ் ஹீரோவாக நடித்திருப்பதால் எப்படி இருக்கும் என்ற ஆவல் அனைவரிடமும் எழுந்திருந்தது.
வெளியான டைட்டில் டீசர்: இந்நிலையில் DC படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. அதில் கையில் கத்தியுடன் முகம் முழுக்க ரத்தத்துடன் லோகேஷ் நடந்துவருகிறார். மறுபக்கம் வாமிகா கபியோ கையில் காண்டத்தோடு நடந்துவருகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆஹா ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே இப்படி ரத்தம் தெறிக்க தெறிக்க லோகி நடந்திருக்கிறாரே; ஏற்கனவே அருண் மாதேஸ்வரன் படத்தில் வன்முறை அதீதமாகவே இருக்கும்.
இதை பார்க்கையில் வன்முறையில் அடுத்தக்கட்டத்துக்கு இரண்டு பேரும் சென்றிருப்பார்கள்போல என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் லோகேஷின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அட்டகாசமாகவும் இருக்கிறது. இப்படமானது அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோவாக வெல்வாரா லோகேஷ் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











