»   »  காமராஜருக்காக ஆல்பம் வெளியிடும் 'லொள்ளு சபா' ஜீவா!

காமராஜருக்காக ஆல்பம் வெளியிடும் 'லொள்ளு சபா' ஜீவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது இருக்கும் இளம் நடிகர்கள், இளம் கலைஞர்கள் பரபரப்புக்காக எது எதற்கோ ஆல்பம் வெளியிடுகிறார்கள். பீப் ஸாங், லவ் ஆந்தம் என்று.

ஆனால் உருப்படியாக எதையாவது செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட டக்கரு...டக்கரு... ஆல்பம் ஹிட் அடித்தது. பீட்டா வரை சென்று அவர்கள் ஆதியை வசைபாடி அதற்கு அவரும் பதிலடி கொடுத்துவிட்டார்.

Lollu Sabha Jeeva to release album on Kamarajar

நடிகர்களில் லொள்ளுசபா ஜீவா காமராஜரின் தீவிர அனுதாபி. சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து பெருந்தலைவர் புகழ் பாடி வருபவர். நாளை மறுநாள் காமராஜரின் பிறந்தநாள் என்பதால் சுமார் ஒரு வருடமாக ஆராய்ச்சி செய்து தனது சொந்த செலவில் ஒரு ஆல்பம் வெளியிடப் போகிறாராம்.

புறப்படு தோழா என ஆரம்பிக்கும் அந்த ஆல்பத்தில் காமராஜரின் அரிய படங்களும், வீடியோக்களும், பேச்சும் அடங்கியுள்ளது. நல்ல முயற்சி.. வெல்டன் ஜீவா!

English summary
Lollu Sabha Jeeva to release album on Kamarajar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil