Don't Miss!
- Sports
சிங்கம் களமிறங்கிடிச்சி.. ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் தேதி இதுதான்.. அதுவும் மாஸான போட்டியிலாம்!
- News
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம்.. அதிமுகவை பின்னுக்கு தள்ள முயற்சி.. திருமாவளவன் குற்றச்சாட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இளையராஜாவை யாரென்று தெரியாமல் இருந்து கமல்ஹாசன்
சென்னை : இளையராஜாவை யாரென்றே பல நாட்கள் தெரியாமல் இருந்தேன். கங்கை அமரனை தான் இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என கமல்ஹாசனே கூறி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, இன்று அனைவரும் லெஜண்ட் என போற்றும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இதே போல் இளையராஜா 1970 களில் அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி பல ஆயிரம் பாடல்களை உருவாக்கி, உலகப் புகழ்பெற்றுள்ளார்.
விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோல் முக்கியமானதாக இருக்கும்..நடிகர் நரேன்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகளை உலகம் முழுவதும் தீவிரமாக செய்து வருகிறார் கமல். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசனின் இசைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கமல் அழைக்கப்பட்டிருந்தார்.

எல்லாமே பான் இந்தியா படம் தான்
இந்த நிகழ்ச்சியின் போது விக்ரம் படம் பற்றியும், தனது திரையுலக அனுபவங்கள் பற்றியும் பல விஷயங்களை கமல் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், பான் இந்தியா படம் என்று எதுவும் இல்லை. அனைத்து படங்களும் பான் இந்தியா படம் தான். அதை ரசிகர்களை பார்க்க வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்திய சினிமாக்கள் சர்வதேச சினிமாக்களாக மாற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. சினிமா என்பது பொதுவான ஒன்று. அதில் மொழியை கலக்காதீர்கள்.

சினிமாவில் மொழியை கலக்காதீர்கள்
இது நாங்கள் குளிக்கும் குளம், நாங்கள் குடிக்கும் குளம். இதில் தயவு செய்து அசிங்கத்தை கலக்காதீர்கள். ஜாதிகளுக்கு அப்பாற்பட்டது சினிமா. அதில் மொழி பாகுபாட்டையோ, ஜாதிய பாகுபாட்டையோ கலப்பதை யாரும் அனுமதிக்கக் கூடாது. பெரிய திரையில் இருந்து நான் சின்ன திரைக்கு வந்த போது பலரும் இது தேவையா என்றனர். வார வாரம் மூன்றரை கோடி பேரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் போது அதை நான் ஏன் தவற விட வேண்டும்.

வாரந்தோறும் சூப்பர் ஹிட் பார்க்கிறேன்
ஒரு கோடிக்கும் குறைவானர்கள் பார்த்தாலே அந்த படம் சூப்பர் ஹிட். நான் வாரந்தோறும் சூப்பர் ஹிட் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரிஸ்ட் வாட்ச்சில் படம் பார்க்கும் நிலை வந்து, அதில் நடிக்க சொன்னாலும் நான் நடிப்பேன். நாங்கள் விக்ரம் படம் எடுத்த போது சவுண்ட் எஃபெக்ட் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதில் ஆரம்பத்தில் வரும் சத்தங்கள் அனைத்தும் கொடுத்தது நான் தான். ராக்கெட் போகும் சத்தம் கூட கிடைக்கவில்லை. பிறகு மைக்கை பக்கத்தில் வைத்து அதையும் நானே தான் செய்தேன்.

இளையராஜாவை யாரென தெரியாது
எனக்கு பல காலமாக இளையராஜாவே யாரென்று தெரியாது. கங்கை அமரனை தான் இளையராஜா என நினைத்துக் கொண்டிருந்தேன். அன்னக்கிளி படத்திற்காக பாராட்டு விழாவோ, விருது விழாவோ நடைபெற்ற போது தான் மேடையில் இளையராஜாவை அழைத்தார்கள். நான் கூட கங்கை அமரனை பார்த்து மேடைக்கு வரும் படி அழைத்தேன். அவர் இல்லை வேண்டாம் என தயங்கி உட்கார்ந்திருந்தார். எவ்வளவு அடக்கமாக இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த போது தான் இளையராஜா மேடைக்கு வந்தார். அப்போது தான் தெரியும் அவர் தான் இளையராஜா என்று. அப்படி தான் இளையராஜாவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது என்றார்.

சினிமாவின் எதிர்காலம் தெரியாது
விக்ரம் படத்தில் வரும் பத்தல பத்தல பாடலை இந்தியிலும் நான் தான் பாடி உள்ளேன். விக்ரம் படத்தில் இளையராஜா இசையை பயன்படுத்தலாம் என்ற ஐடியாவை கூறியதே அனிருத் தான் என்றார். சினிமாவை வீட்டிற்கே அழைத்து வர வேண்டும் .டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதை ஆரம்பித்து வைத்தவரே நீங்கள் தான். அன்று அதை எதிர்த்தவர்கள் இன்று வேறு வழியில்லாமல் நீங்கள் சொன்ன வழிக்கு வந்துள்ளனர் என எஸ்பிபி சரண் சொன்ன போது. நான் யாருடைய தோள்களில் அமர்ந்துள்ளேன்...பாலச்சந்தரின் தோளில், பாலுமகேந்திராவின் தோளில் அமர்ந்துள்ளேன். அந்த உயரத்தில் நான் அமர்ந்திருப்பதால் சினிமாவின் எதிர்காலம் எனக்கு தெரிகிறது என்றார் கமல்.