»   »  மோடி பக்தாள்களின் சேட்டையை பாருங்கள் என ட்விட்டரில் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட வீடியோ

மோடி பக்தாள்களின் சேட்டையை பாருங்கள் என ட்விட்டரில் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ் #justasking(சும்மா கேட்கிறேன்) என்ற ஹேஷ்டேக் போட்டு மத்திய அரசிடம் ட்விட்டரில் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ் அடிக்கடி கேள்வி கேட்பதால் பாஜகவினர் அவர் மீது கடுப்பில் உள்ளனர்.

முற்றுகை

முற்றுகை

கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்காவில் பிரகாஷ் ராஜின் காரை முற்றுகையிட்ட பாஜகவினர் மோடி மோடி மோடி என்று முழக்கமிட்டுள்ளனர். அவர்கள் காரை முற்றுகையிட்டதை பார்த்து பயப்படாமல் சிரித்தபடி நன்றி தெரிவித்து சீரியஸ் காட்சியை காமெடி காட்சியாக மாற்றியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

ட்விட்டர்

பாஜக பக்தாள்களின் வேலையை பாருங்கள். ஜோக்கர்கள் என்று கூறி தனது கார் முற்றுகையிடப்பட்டபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

ஆதரவு

நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால் தான் எதிர்ப்பு வருகிறது என்று நெட்டிசன்கள் பிரகாஷ்ராஜிடம் தெரிவித்துள்ளனர்.

உண்மையா?

பிரகாஷ்ராஜின் ட்வீட்டை பார்த்த ஒருவர், நீங்கள் சர்ச் பாதிரியாராகிவிட்டதாக என் நண்பன் கூறினான், உண்மையா? என்று கேட்டுள்ளார்.

English summary
Actor Prakash Raj tweeted that, 'Look at the bjp Modi Bhakts behave like hooligans.. with me in Gulbarga in karnataka last night. Bunch of jokers..🤣🤣. Hello don’t you believe in dialogue .. do you think you can terrorise me .. .do u know ur actually making me stronger ..#justasking'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X