கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுடன் ரொமான்ஸ் காட்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியா!

சென்னை : இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் பிரபல மலையாள திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன்5.25 தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது.

இதில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடியாக நடித்து வருகின்றனர். யோகி பாபு, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடித்துள்ளனர்.

சென்ற வாரம் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இதில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் படுக்கை அறையில் மிகவும் நெருக்கமாக வைத்துள்ள ரொமான்ஸ் காட்சிகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்க இப்பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லாஸ்லியா .

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவியில் 100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை 4 சீசன்கள் முடிந்திருக்க அதில் 3வது சீசன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசனாக இன்றுவரை இருந்து வருகிறது. மாடலிங் துறையில் பல ஆண்டுகளாக வலம் வந்த நடிகர் தர்ஷன் ஒரு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை தேடிக்கொண்டிருந்த தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். அவரைப் போன்றே இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த லாஸ்லியா சீசன் 3ல் போட்டியாளராக இருவரும் கலந்து கொண்டு பலகோடி ரசிகர்களின் மனதை வென்றுள்ளனர்.

ரோபோ முக்கிய கதாபாத்திரத்தில்

ரோபோ முக்கிய கதாபாத்திரத்தில்

மேலும் இந்த படத்தை இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பதோடு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தம் வருகிறார். மலையாளத்தில் சுராஜ் நடித்த வயதான முதியவர் கதாபாத்திரத்தில் கேஎஸ் ரவிக்குமார் நடிக்க அவருக்கு மகனாக பிக் பாஸ் தர்ஷன் லீட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரோபோ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. தமிழ் சினிமாவில் ரோபோவை வைத்து வெளிவந்த திரைப்படங்களை மிக எளிதில் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு சொற்ப அளவிலேயே வெளியாகியிருக்கும் நிலையில் இப்பொழுது கூகுள் குட்டப்பா ரோபோவை மையப்படுத்தி வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

படப்பிடிப்புக்காக ரஷ்யா

படப்பிடிப்புக்காக ரஷ்யா

கேரளா மற்றும் தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யா செல்ல உள்ளது. ரஷ்யாவில் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வெளிநாட்டில் வேலைசெய்யும் மகன் அப்பா ஊரில் துணை இல்லாமல் தனிமையில் இருப்பதை பார்த்து அவருக்கு உதவியாக பணிகள் செய்ய ரோபோ ஒன்றை அனுப்பி வைக்கிறார். ஆரம்பத்தில் ரோபோவுக்கும் முதியவருக்கும் ஒத்து போகாமல் இருக்க நாளடைவில் இருவரும் நண்பர்களாக பழகி பின் தந்தை மகனாகவே மாறிவிடுகின்றனர்.

அண்ணன் தங்கையாக

அண்ணன் தங்கையாக

ஒரு கட்டத்தில் மீண்டும் அந்த ரோபோவை மகன் எடுத்துச்செல்ல முதியோருக்கும் ரோபோவுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டு மிகவும் சுவாரசியமாக படம் உருவாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் போட்டியாளர்களாக மாறிய தர்ஷன் மற்றும் லாஸ்லியா இப்படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன் தங்கையாக பழகி வந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள் என்று அறிவிப்பு வந்தபோதே சில சர்ச்சைகள் எழுந்தது. இதையடுத்து சமீபத்தில் கூகுள் குட்டப்பா படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா மிக நெருக்கமாக படுக்கை அறையில் மற்றும் சமையலறையில் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கும் சீன்கள் இடம்பெற்றுள்ளன. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் டீஸர் வெளியான நாள் முதலே லாஸ்லியா மற்றும் தர்ஷனை கேள்விகளால் துளைத்தெடுத்து வந்தனர்.

படுக்கையறை ரொமான்ஸ் காட்சி

படுக்கையறை ரொமான்ஸ் காட்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை என கூறிய லாஸ்லியா மற்றும் தர்ஷன் இப்பொழுது படுக்கை அறையில் மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருப்பது எப்படி.. என பல சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க அதற்கு நடிகை லாஸ்லியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

படத்தை படமாக பாருங்கள்

படத்தை படமாக பாருங்கள்

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தர்ஷன் எனக்கு அண்ணன் மாதிரி படத்தில் வரும் ரொமான்டிக் காட்சிகள் வெறும் நடிப்பு மட்டுமே யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் படத்தை படமாக மட்டும் பாருங்கள் நிஜவாழ்க்கையில் ஒப்பிடாதீர்கள் . அந்தக் காட்சி எடுக்கப்பட்ட போது நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டே செம ஜாலியாக தான் எடுத்து முடித்தோம். இது வெறும் நடிப்பு மட்டுமே . என சர்ச்சைகளுக்கு ஒரே போடாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லாஸ்லியா பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X