லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மான் கான்!

ஹைதராபாத் : மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மெகா ஹிட் வெற்றி பெற்ற லூசிஃபர் திரைப்படம் இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Recommended Video

MS Dhoni's special meeting with Thalapathy Vijay | Beast Shooting spot

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக chiru153 என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை 5.04 முக்கிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்ததை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக இருக்க மேலும் ஒரு புதிய தகவலாக இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

ரீமேக் இயக்குனர் அடையாளம்

ரீமேக் இயக்குனர் அடையாளம்

பிரபலமான தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து இயக்கி புகழ் பெற்ற இயக்குனராக இருந்த மோகன்ராஜா ரீமேக் இயக்குனர் என்ற அடையாளத்தை உடைத்து இப்பொழுது சொந்த கதைகளை இயக்கி வருகிறார். அந்த வகையில் வெளியான தனி ஒருவன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. காதல் படங்களை இயக்கி வந்த மோகன் ராஜாவிடம் இருந்து இந்த மாதிரியான ஒரு தனித்துவமான கதை வந்ததை பார்த்த ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் இருக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலைக்காரன் என்ற மாஸான படத்தை கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகர் ஒருவரை இயக்க தயாராகிக் கொண்டிருந்த மோகன்ராஜா இப்பொழுது தெலுங்கு பக்கம் சென்று பிரபல மலையாள சூப்பர் ஹிட் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. அரசியல் த்ரில்லர் கதை களத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்திருந்தனர். விறுவிறுப்பான த்ரில்லர் கதைக்களத்தில் வெளியான லூசிஃபர் மாபெரும் வெற்றி பெற்று அந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக முன்னிலை வகித்தது.

இயக்குனராக அறிமுகம்

இயக்குனராக அறிமுகம்

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பிருத்விராஜ் லூசிஃபர் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. லூசிஃபர் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான பிரித்விராஜ் முதல் இயக்கத்திலேயே சிக்ஸர் அடித்து தான் ஒரு வெற்றி இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். லூசிஃபர் திரைப்படம் சிரஞ்சீவியின் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வருகிறது.

தங்கையாக நயன்தாரா

தங்கையாக நயன்தாரா

தமிழில் முன்னணி இயக்குனராக உள்ள மோகன்ராஜா இப்படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலின் தங்கையாக மஞ்சு வாரியர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு chiru 153 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது . இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்த படக்குழு இப்பொழுது முதல் அப்டேட்டை வெளியிட தயாராகி உள்ளது.

சிறப்பு தோற்றத்தில் தோன்றுவார்

சிறப்பு தோற்றத்தில் தோன்றுவார்

அதன்படி இன்று மாலை 5.04 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. ஒருவேளை இந்த படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக கூட இருக்கலாம் என தெலுங்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு அட்டகாசமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது மலையாளத்தில் லூசிஃபர் படத்தை இயக்கிய பிரித்விராஜ் அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவார். அதேபோல தெலுங்கு ரீமேக்கில் மிகப்பெரிய நடிகர் ஒருவர் பிரித்விராஜ் நடித்த சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.

சல்மான் கான்

சல்மான் கான்

இதைப் பற்றிய முக்கிய தகவலை அறிந்த தெலுங்கு ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். பாலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சல்மான் கான் லூசிஃபர் தெலுங்கில் பிரித்விராஜ் நடித்த அந்த சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சல்மான் கானின் நடிப்பில் கடைசியாக இந்தியில் வெளியான ராதே திரைப்படம் படு மோசமான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வியை பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக மெகா பட்ஜெட் கூட்டணியில் நடித்துவரும் சல்மான்கான் இப்பொழுது லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ள செய்தியை அறிந்த தெலுங்கு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

இன்று மாலை 5.04 மணிக்கு

இன்று மாலை 5.04 மணிக்கு

சல்மான் கானின் பல திரைப்படங்கள் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வரும் நிலையில் முதன்முறையாக தெலுங்கில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இசை கோர்ப்பு பணிகளை தொடங்கி விட்டதாகவும் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக ரெடியாக இருப்பதாகவும் கூறப்பட்டது . இப்பொழுது அட்டகாசமான அப்டேட்டாக சல்மான் கான் இந்த படத்தில் நடிக்க உள்ள செய்தி தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இதில் சிரஞ்சீவியின் தங்கையாக நயன்தாரா நடிப்பாரா அல்லது கீர்த்தி சுரேஷ் நடிப்பாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் சூப்பரான அப்டேட்டை எதிர்பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமே காத்துக் கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X