»   »  லைகா புரொடக்ஷன்ஸ்...மீண்டும் இணைகிறது ‘கத்தி’ கூட்டணி!

லைகா புரொடக்ஷன்ஸ்...மீண்டும் இணைகிறது ‘கத்தி’ கூட்டணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்கள் ஏஆர் முருகதாஸும், லைகா நிறுவனமும். இது விஜய் 62 படத்துக்காக.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது 'தளபதி 61'. முதல் கட்டடமாக 25 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.

Lyca, AR Murugadass to join with Vijay again

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ்.

கத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணி இணையவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம்தான் கத்தி படத்தை பெரும் சர்ச்சைக்கிடையில் தயாரித்தது. இப்போது நிலைமையே வேறு. லைகாவுக்கு செல்லுமிடமெல்லாம் ரத்தினக் கம்பள வரவேற்பு. எனவே முன்னிலும் உற்சாகத்துடன் படத் தயாரிப்பைத் தொடர்கிறார்கள்.

இந்த ஆண்டு லைகாவின் மெகா ரிலீஸ் நம்ம சூப்பர் ஸ்டாரின் 2.ஓ. அடுத்த மெகாதான் விஜய் 62.

English summary
Lyca Productions, AR Murugadass and Vijay are joining together for next mega venture soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil