»   »  நடிகர் சங்கத்துக்கு ரூ 1 கோடி... விஷாலிடம் நேரில் வழங்கியது லைகா நிறுவனம்!

நடிகர் சங்கத்துக்கு ரூ 1 கோடி... விஷாலிடம் நேரில் வழங்கியது லைகா நிறுவனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக லைகா நிறுவனம் அறிவித்த ரூ 1 கோடிக்கான காசோலையை இன்று நேரில் விஷாலிடம் வழங்கப்பட்டது.

கமல்ஹாசன் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு' படத்தின் பூஜை சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது.

இப்படத்தை லைக்கா நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

Lyca handed over Rs 1 cr to Nadigar Sangam

இப்படத்தின் பூஜையின் போது, நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி தருவதாக அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து லைக்கா நிறுவன சென்னை நிர்வாகி ராஜு மகாலிங்கம் இன்று அந்த ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளார் கார்த்தி ஆகியோரை சந்தித்து வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் நிர்வாகிகளான ஐசரி கணேஷ், நடிகர் ராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.

English summary
Lyca Productions have handed over a cheque for Rs 1 cr to Nadigar Sangam Building fund today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil