»   »  வடிவேலு படம்... ஷங்கருடன் இணைந்து தயாரிக்கும் லைகா!

வடிவேலு படம்... ஷங்கருடன் இணைந்து தயாரிக்கும் லைகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வடிவேலு நாயகனாக நடிக்கும் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தை இயக்குநர் ஷங்கருடன் இணைந்து தயாரிக்கிறது லைகா நிறுவனம்.

வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கி கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி'.


Lyca joins with Shankar to produce Vadivelu movie

சரித்திர பின்னணியில் எள்ளல் நகைச்சுவைப் படமாக வெளியானது. இன்றும் ரசித்துப் பார்க்கும் படமாகத் திகழ்கிறது.


இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் இயக்குநர் சிம்பு தேவன். வடிவேலுவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.


முதல் பாகத்தைத் தயாரித்த ஷங்கரே இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பார் என்று கூறப்பட்டது. இப்போது ஷங்கருடன் இணைந்து லைகா நிறுவனமும் இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது.


ஏற்கெனவே ரஜினி நடிக்கும் 2.ஓ உள்ளிட்ட 5 படங்களைத் தயாரித்து வருகிறது லைகா. கமல் - இளையராஜா இணையும் படத்தையும் லைகாதான் தயாரிக்கிறது.

English summary
Lyca Productions is joining with Shankar to produce Vadivelu starring Imsai Arasan 23-am Pulikesi 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil