Don't Miss!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
“நான் அவரது முதல் மாணவர்“…. இளையராஜாவிடம் இசை நுணுக்கங்களை கற்கும் லிடியன் !
சென்னை: தனது அற்புதமான இசையமைப்பால் உலகை வியப்பில் ஆழ்த்திய லிடியன் நாதஸ்வரம், இசையமைப்பாளர் இளையராஜாவின் முதல் மற்றும் ஒரே மாணவனாக மாறியுள்ளார்.
இளையராஜாவின் இசை ஸ்டுடியோவில் இசை தொடர்பான விஷயங்களை அவரிடம் கற்று வருகிறார் லிடியன். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லிடியன் மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'பரோஸ்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், அத்கன் சத்கன் என்ற இந்தி திரைப்படம் ஒன்றிலும் லிடியன் நடித்துள்ளார்.
குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்.. இன்னும் பல கோடிகளை அதிரடியாக ஏற்ற நடிகை.. அப்படி ஆடவும் ரெடியாம்?

லிடியன்
சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்தவர் லிடியன். 2019ம் ஆண்டில் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான' தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' என்கின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது தன்னுடைய திறமையை உலகரியச் செய்தார்.

பல விருதுகள்
லிடியன் இரண்டு வயது முதல் ட்ரம்ஸ் வாசித்து வருகிறார். மொசார்ட், பீதாதோவன் ஆகியோரின் இசைக்குறிப்புகளை பியானோவில் வாசிக்கும் அளவுக்கு திறமையானவர். அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்க முடியும். பல நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லிடியன் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

நான் அவரது முதல் மாணவர்
இந்நிலையில், லிடியன் நாதஸ்வரம் இசைஞானி இளையராஜாவிடம் இசையும் கற்று வருகிறார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள லிடியன் நாதஸ்வரம், என்னுடைய இசை ஆசிரியர் மேஸ்ட்ரோ இளையராஜா என்னிடம், நான் அவரது முதல் மாணவர் எனக் கூறினார். அவர் ஒவ்வொரு நாளும் அன்பு மற்றும் அரவணைப்புடன் எனக்கு பயிற்றுவிக்கிறார். உங்களுடைய வாழ்த்தும் ஆசிர்வாதமும் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள்
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் அரை நூற்றாண்டு காலமாக உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அவரது மெல்லிசைப் பாடல்களில் மயங்காதவர்களே இருக்க முடியாது. பல படங்களுக்கு தன் பின்னணி இசைமூலம் உயிரூட்டியவர் இசைஞானி இளையராஜா. அவரிடம் இசை நுணுக்கங்களை பயின்று வரும் லிடியனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் லிடியன் பகிர்ந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளப் பக்கத்தில் டிரெண்டாகி வருகிறது.