»   »  இந்த ஆண்டும் நா முத்துக்குமார் சாதனை... 33 படங்களில் அவர் பாட்டுதான்!

இந்த ஆண்டும் நா முத்துக்குமார் சாதனை... 33 படங்களில் அவர் பாட்டுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த 2015-ம் ஆண்டிலும் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் பாடல்கள் எழுதி முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார் கவிஞர் நா முத்துக்குமார்.

கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக ஆதிக்கம் செலுத்தி வருபவர் நா.முத்துக்குமார். நாட்டின் உயரிய தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.

தொடர்ந்து நிறைய படங்களில் அதிக பாடல்களை எழுதி வரும் நா.முத்துக்குமார் 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதியுள்ளார். இதில், 9 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

Lyricist Na Muthukumar gets top place in 2015

இதில் பாபநாசம், காக்கிச்சட்டை, பசங்க 2, டார்லிங், விஎஸ்ஓபி உள்ளிட்ட படங்கள் அடங்கும்.

அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ‘தெறி', ‘சேதுபதி', ‘கோ-2'. ‘தரமணி' உள்ளிட்ட 120 படங்களுக்கும் மேல் பாடல்களை எழுதி வருகிறார்.

இதுகுறித்து நா முத்துக்குமார் கூறுகையில், "2015 ரசிகர்கள் ஆதரவுடன் இந்த ஆண்டு வெற்றிகரமாக அமைந்ததுபோல், அடுத்த ஆண்டும் வெற்றி ஆண்டாக அமையும் என நம்புகிறான். 2015-ல் அதிக பாடல் எழுதியுள்ள இந்த தருணத்தில், எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பாடிய பாடகர்கள், பாடகிகள், சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி," என நா முத்துக்குமார் கூறியுள்ளார்.

English summary
Lyricist Na Muthukumar is placed the top position among the lyricists in the year 2015.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil