லவ் யூ பாப்பா... மனைவி பெயரை பச்சை குத்திய ஸ்நேகன்

சென்னை : தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சிவசெல்வன், சினிமாவிற்காக தனது பெயரை ஸ்நேகன் என மாற்றிக் கொண்டார். கவிஞயர் வைரமுத்துவிடம் 5 ஆண்டுகள் பணியாற்றிய ஸ்நேகன், 2017 ல் புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.

இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார் ஸ்நேகன். பல ஹிட்டான பாடல்களை எழுதி, புகழ்பெற்ற ஸ்நேகன், தனது நண்பர் அமீர் இயக்கிய யோகி படத்தின் மூலம் நடிகராகவும், பின்னணி பாடகராகவும் அறிமுகமானார். யோகி படத்தில் ஸ்நேகன் நடித்த சடையன் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. பாரதி கண்ணம்மா சீரியலிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

அரசியலில் இணைந்த ஸ்நேகன்

அரசியலில் இணைந்த ஸ்நேகன்

அதற்கு பிறகு உயர்திரு 420 , கோமாளி, ராஜராஜ சோழன், பூமி வீரய்யன், எவனும் புத்தனில்லை போன்ற படங்களில் நடித்தார். டிவி சீரியல் பாடல்கள் எழுதியதுடன், பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார் ஸ்நேகன். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, ரன்னர் அப் விருதினை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்து, முக்கிய பொறுப்பில் இருந்த ஸ்நேகன், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

Recommended Video

OTT தளங்களும் பெரிய நடிகர்கள் பக்கம் ஓடுகிறார்கள் Lyricist Snehan Speech| Adangamai |Filmibeat Tamil
கமல் தலைமையில் திருமணம்

கமல் தலைமையில் திருமணம்

ஸ்நேகன், தனது நீண்ட நாள் காதலியான நடிகை கன்னிகாவை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். கன்னிகா, திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு உள்ளிட்ட சில சீரியல்கள், சில படங்களிலும் நடித்துள்ளார். கமல் தலைமையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்த நாளே புது மனைவியை அழைத்துக் கொண்டு, தான் நடிக்கும், ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள சென்றார் ஸ்நேகன். அருண் விஜய் நடிக்கும் படத்திலும் ஸ்நேகன் நடித்து வருகிறார்.

பச்சை குத்திய ஸ்நேகன்

பச்சை குத்திய ஸ்நேகன்

கன்னிகாவும், ஸ்நேகனும் தொடர்ந்து சோஷியன் மீடியாவில் தங்களின் ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் லேட்டஸ்டாக, தனது மனைவி கன்னிகாவின் பெயரை தனது வலது கை மணிக்கட்டில் ஸ்நேகன் டாட்டூவாக எழுதி உள்ளார் ஸ்நேகன். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்நேகன், அதோடு லவ் யூ பேபி என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

லவ் யூ சொன்ன மனைவி

இதே வீடியோவை தானும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கன்னிகா, லவ் யூ என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பலர் பாராட்டி, வாழத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X