Don't Miss!
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- News
இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது! நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை
- Automobiles
இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Finance
பட்ஜெட்டுக்கு முன்பு தங்கம் விலை சரிவு.. தொடர்ந்து குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
- Travel
இனி திருப்பதி தரிசனம், ரூம் புக்கிங் செய்வது ஈசி – TTD யின் புதிய மொபைல் செயலி!
- Sports
3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??
7500 பாடல்கள் எழுதி விட்டு சில லட்சங்களுக்காக காத்திருக்கிறேன்...உருக வைத்த வைரமுத்து
சென்னை : 7500 பாடல்களை எழுதி உள்ளேன். இவர்கள் தரும் சில லட்சங்களுக்காக காத்திருக்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து பேசிய பேச்சு அனைவரையும் உருக வைத்துள்ளது. ராயல்டி பற்றி அவர் பேசிய வார்த்தைகளுக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.
Recommended Video
கவிஞர், பாடலாசிரியர், நாவல் எழுத்தாளர் என தமிழ் திரையுலகையும், இலக்கிய உலகையும் தனது வைர வரிகளால் ஆட்சி செய்து வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து. 1980 ம் ஆண்டு நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் கடந்த 40 ஆண்டுகளில் தனது பாடல் வரிகளால் எட்ட முடியாத உயரத்தை தொட்டு விட்டார். இதுவரை 7500 க்கும் அதிகமான பாடல்களை வைரமுத்து எழுதி உள்ளார்.
தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், சாகித்ய அகாடமி என பல விருதுகளை வென்றுள்ளார். இந்தியாவில் உள்ள பாடலாசிரியர்களிலேயே மிக அதிகபட்சமாக 7 முறை தேசிய விருது வென்ற ஒரே கவிஞர், வைரமுத்து தான். இவர் தற்போது நாட்படு தேறல் என்ற தலைப்பில் 100 பாடல்கள், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள் என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளார்.
சுஹாசினியின்
இந்தி
ஆதரவு
பேச்சு...இது
கமல்ஹாசனுக்கு
தெரியுமா?...வறுத்தெடுக்கும்
நெட்டிசன்கள்!

ராயல்டி விழாவில் வைரமுத்து
இந்நிலையில் திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு ராயல்டியை பெற்றுத்தரும் IPRS எனும் ( இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட் ) அமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பாடலாசிரியர்கள் கவிஞர் வைரமுத்து , பாடலாசிரியர் விவேகா, மதன் கார்க்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ராயல்டி பற்றி வைரமுத்து பேசிய பேச்சிற்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது.

100 பாட்டு எழுதினால் தீவு வாங்கலாம்
விழாவில் அவர் பேசுகையில், கலைஞர்கள் பாவம். அவர்கள் கற்பனைவாதிகள். சட்டம் அறியாதோர். உரிமை தெரியாதோர். பூமியில் நின்று கொண்டு நட்சத்திரத்தில் வாழ்வோர். தாய்ப்பாலுக்கும் , நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள். இந்த அமைப்பு வருவதற்கு முன்பு ராயல்டி அல்ல, நாயர் டீ கூட எங்களுக்கு கிடையாது . வெளிநாடுகளில் 100 பாட்டு எழுதினால் அவர் சுவாசிப்பதை தவிர வேறு ஏந்த வேலையும் செய்ய தேவையில்லை. பசிபிக் கடல் ஓரத்தில் அவரால் தீவு வாங்கி விட முடியும்.

7500 பாடல் எழுதி லட்சங்களுக்காக காத்திருக்கிறேன்
பணம் தீர்ந்த பிறகு மீண்டும் பாட்டெழுதி சம்பாதித்து தீவை வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் 7,500 பாடல் எழுதிவிட்டேன் . இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன். திரைத்துறையில் இருப்போரால் 25 ஆண்டுகள் இருக்க முடியும், அதிலும் 15 ஆண்டுகள்தான் புகழுடன் இருக்க முடியும் . கல்லில் நார் உரிப்பது போல இவர்கள் போராடி ராயல்டியை பெற்றுத் தருகின்றனர்.

பாடலாசிரியர்களுக்கு ராயல்டி வேண்டும்
இசையமைப்பாளர்களும் , பாடலாசிரியர்களும் பாவம். இவர்கள்தான் உருவாக்குபவர்கள், மூலமானவர்கள். எனவே தான் இவர்களுக்கு ராயல்டி வேண்டும் என்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன் உச்சத்தில் இருந்தோரை இப்போது உச்சரிக்கவே மறந்துபோன சமூகத்தில் நாம் வாழ்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் இவ்வமைப்பை தோற்றுவித்த எம்.வி. சீனிவாசன் ஒரு கம்யூனிஸ்ட். ஜெயகாந்தனின் தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடலுக்கு இசையமைத்தவர். அரசு , நிறுவனம் , நீதிமன்றங்களோடு போராடி இவர்கள் ராயல்டியை பெற்றுத் தருகின்றனர். 300 கோடியை தாண்டி ராயல்டியை பெற்றுள்ளனர்.

நம்பகமான செய்தி தாருங்கள்
குன்றின்மீது நின்று கூவினாலும் ஊடகம் மூலம் சென்றால்தான் அது ஊர் சென்று சேரும். சமூக ஊடகங்களால் செய்திகள் குறித்த நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. அச்சு ஊடகங்கள் அளவு பிற ஊடகங்களை நம்புவதில்லை என பலர் கூறுகின்றனர். நானும் அச்சு ஊடகங்களை அதிகம் நம்புகிறேன். தொலைக்காட்சி ஊடகங்களும் நம்பகத்தன்மை கொண்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்" என வைரமுத்து கேட்டுக் கொண்டார்.