அண்ணா...மாநாடு அப்டேட் எப்போ... தயாரிப்பாளர் சொன்ன பகீர் தகவல்

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள மாநாடு படம் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த மாதம் முடிவடைந்தது.

இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன், த்ரில்லர் கலந்த அரசியல் படமாக, வித்தியாசமான கதையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 வாட்ச் பரிசளித்த சிம்பு

வாட்ச் பரிசளித்த சிம்பு

படப்பிடிப்பு முடிந்ததும் காஸ்ட்லி வாட்ச்சை மாநாடு டீமில் உள்ள அனைவருக்கும் சிம்பு பரிசாக வழங்கினார். டைரக்டர் வெங்கட் பிரபு உள்ளிட்ட 300 பேர் கொண்ட ஒட்டுமொத்த டீமுக்கும் அவர் காஸ்ட்லி வாட்ச் பரிசளித்தார். இந்த ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.

எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபஸ்ட்லுக்

எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபஸ்ட்லுக்

அடுத்தடுத்து வெளியிடப்பட்ட மாநாடு படத்தின் ஃபஸ்ட்லுக், ஃபஸ்ட் சிங்கிள் பாடல் உள்ளிட்டவைகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வந்தது. யுவன்சங்கர் ராஜா இசையில் உருவான ஃபஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

வெங்கட் பிரபு சொன்ன அந்த விஷயம்

வெங்கட் பிரபு சொன்ன அந்த விஷயம்

இந்நிலையில் சமீபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் வலிமை அப்டேட் கேட்க, அவரோ யுவன் இரண்டாவது சிங்கிளை முடித்து விட்டார். விரைவில் வர உள்ளது. என்ஜாய் பண்ணுங்க என்றார். கூடவே மாநாடு படத்தின் இரண்டாவது சிங்கிளும் ரெடியாகி விட்டதாகவும், அதுவும் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 இரண்டாவது சிங்கிள் எப்போப்பா

இரண்டாவது சிங்கிள் எப்போப்பா

இதனால் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று மாநாடு இரண்டாவது சிங்கிள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது சிங்கிள் அல்லது அப்டேட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் வெளியிடப்படவில்லை.

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

இதனால் வலிமை படம் போலவே மாநாடு படத்திற்கும் ரசிகர்கள் அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து அப்டேட் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இந்நிலையில் சுரேஷ் காமாட்சியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியா மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

Recommended Video

Dhanush மட்டும் தான் பண்ணுவரா? நாங்களும் பண்ணுவோம் | Manadu Single Release,STR
தயாரிப்பாளர் தந்த பகீர் தகவல்

தயாரிப்பாளர் தந்த பகீர் தகவல்

மாநாடு ஹாஷ்டாக்கும் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டது. அப்படி வாழ்த்திய சிம்பு ரசிகர் ஒருவர் சுரேஷ் காமாட்சியிடம், அண்ணே...அப்டேட் அண்ணே என கேட்டார். இந்த கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் காமாட்சி, தியேட்டர் திறக்கட்டும் தம்பி. அப்டேட் வரும் என்றார்.

அப்போ எதுவும் இல்லையா இப்போ

அப்போ எதுவும் இல்லையா இப்போ

இந்த பதிலால் மாநாடு படம் தியேட்டர் ரிலீசா அல்லது ஓடிடி ரிலீசா என்ற கேள்விக்கு தியேட்டர் ரிலீஸ் என்ற தெளிவாக விட்டது. அதோடு இப்போதைக்கு அப்டேட் எதுவும் கிடையாது, தியேட்டர் திறக்கப்பட்ட பிறகு அடுத்த அறிவிப்பு என்பதையும் நருக்கென சொல்லி உள்ளார் சுரேஷ் காமாட்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X