»   »  மும்பை வெள்ளத்தில் சிக்கித் தவித்த மாதவன், ஹூமா குரேஷி

மும்பை வெள்ளத்தில் சிக்கித் தவித்த மாதவன், ஹூமா குரேஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர்கள் மாதவன், அனுபம் கேர், நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் மும்பை வெள்ளத்தில் சிக்கித் தவித்துள்ளனர்.

கனமழையால் மும்பை நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அதை தெரிவித்துள்ளனர்.

மாதவன்

வெள்ளத்தால் வீட்டிற்குள் போக முடியாமல் காரில் சிக்கிக் கொண்டார் மாதவன். அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மாதவன்.

அனுபம் கேர்

கனமழையில் என் காரில் சிக்கிக் கொண்டேன். நண்பரை அழைத்தேன். அவர் தனது மகளுடன் வந்து காப்பாற்றினார். தற்போது அவர் வீட்டில் இருக்கிறேன் என்று பாலிவுட் நடிகர் அனுபம் கேர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஹூமா குரேஷி

3 மணிநேரமாக தேசிய நெடுஞ்சாலையில் சிக்கினேன்...மக்கள் சக மக்களுக்கு உதவி செய்வதை பார்த்தேன்..இது தான் என் மும்பை. அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.. தற்போது நான் கிளம்புகிறேன் என்று ட்வீட்டியுள்ளார் நடிகை ஹூமா குரேஷி.

மகேஷ் பட்

சரியான நேரத்தில் எங்களை காரில் இருந்து காப்பாற்றினார்கள் தாராள மனமுள்ள நபர்கள் என்று பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Actors Madhavan, Anupam Kher, actress Huma Qureshi and Bollywood director Mahesh Bhatt have got stuck in cars because of heavy rains in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil