»   »  மும்பை வெள்ளத்தில் சிக்கிய கார்... இடுப்பளவு வெள்ளத்தில் நடந்து சென்ற மாதவன்! #MumbaiFloods

மும்பை வெள்ளத்தில் சிக்கிய கார்... இடுப்பளவு வெள்ளத்தில் நடந்து சென்ற மாதவன்! #MumbaiFloods

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை மாநகரமே பெருமழை வெள்ளத்தில் மூச்சுத் திணறிக் கொண்டுள்ளது. பொது மக்கள் மட்டுமல்ல, பிரபலங்களும்கூட இந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

பெரும்பாலான பிரபலங்கள் வீட்டை விட்டு வெளியிலேயே வரவில்லை. ஆனால் மாதவன் இந்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார். நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளம் சூழ்ந்த சாலையில் மாதவன் காரில் வந்து கொண்டிருந்தார். வெள்ள நீர் புகுந்ததில் வண்டி பழுதாகி நின்றுவிட, நீண்ட நேரம் போராடியும் அதைக் கிளப்ப முடியவில்லை. காரில் அமர்ந்தபடி தனது நிலையை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் மாதவன்.

Madhavan stuck in Mumbai floods

பின்னர் இடுப்பளவு வெள்ளத்தில் இறங்கி நடந்து சென்றார். அவர் கார் வெள்ளத்திலேயே சிக்கிக் கொண்டது.

மாதவன் இப்போது தமிழ், இந்தியில் பிஸியாக உள்ளார். விரைவில் தனது புதிய தமிழ்ப் படத்தை அறிவிக்கவிருக்கிறார்.

English summary
Actor Madhavan’s car broke down on Tuesday and he had to walk to reach home in thigh deep water in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X