Don't Miss!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- News
சிஏஏவில் பலிகடா.. உண்மையை மறைத்த போலீஸ்..ஜாமியா வன்முறையில் ஷார்ஜில் இமாமை விடுவித்த டெல்லி கோர்ட்
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குழந்தைகளை இப்படி தவிக்கவிட்டு போயிட்டாரே.. வடிவேலு பாலாஜி மறைவுக்கு மதுரை முத்து கதறல்!
சென்னை: வாழ வேண்டிய நேரத்தில் வடிவேலு பாலாஜி குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு போயிட்டாரே என்று மதுரை முத்து கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Recommended Video
பிரபல நகைச்சுவை நடிகர், பாலாஜி. வடிவேலு போலவே, கலக்கப் போவது யாரு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியவர்.
அதனாலேயே அவர் பெயருடன் வடிவேலு இணைந்துகொண்டது. நகைச்சுவையால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் பாலாஜி.
எஸ்பிபிக்கு
செய்ததை
போல்
செய்திருந்தால்..
வடிவேல்
பாலாஜி
இருந்திருப்பார்..
அறந்தாங்கி
நிஷா
உருக்கம்!

கோலமாவு கோகிலா
யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்பட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள இவருக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் கை கால்கள் செயலிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 42.

சிவகார்த்திகேயன்
அவர் மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர் பிரிந்த செய்தி கேட்ட பல சினிமா பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அவர் மகளின் படிப்பு செலவை சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார்.

மதுரை முத்து
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் மதுரை முத்து, வடிவேலு பாலாஜி மறைவு குறித்து தெரிவித்துள்ள இரங்கலில் கூறியிருப்பதாவது: 28 வருஷமா மேடை நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டு புகழ்ல உச்சம் தொடர நேரம் அது. அந்த நேரத்துல இப்படியாயிடுச்சு. அதனாலதான் கடவுள் மேல கோபம் வரக் காரணம். வாழ வேண்டிய நேரத்துல இறைவன் வாழ வைக்கலையேன்னு கோபம்.

கடுமையான உழைப்பாளி
வடிவேலு மாதிரியே மேடையில நடிக்கிற பலரை நான் பார்த்திருக்கேன். ஆனா, எளிமையா எல்லாருக்கும் போய் சேர்ற மாதிரி ரசிக்க வைக்கிறதுல பாலாஜி சிறந்த கலைஞன். ஒட்டுமொத்தமா இத்தனை பேர், அவருக்கு இரங்கல் தெரிவிச்சிருக்காங்கன்னா, அவர் எந்தளவு அவங்களை மகிழ்விச்சிருக்காருன்னு பாருங்க. கடுமையான உழைப்பாளி.

செத்து பிழைச்சவன்
எல்லாரும் குழந்தைகளை விட்டுட்டு இளம் வயசுல போயிடறது கொடுமையான விஷயம். நானும் ரெண்டு முறை செத்து பிழைச்சவன். ஒரு விபத்துல நான் கண்முழிச்சு பார்த்ததும் எனக்கு தோணுனது, என் குழந்தை. வடிவேல் பாலாஜிக்கும் அதுதான் இருந்திருக்கும். என் குழந்தை, எங்க அப்பா மாதிரி என் மேல பாசம் காட்ட ஆளில்லைன்னு ஸ்டேட்டஸ் வச்சிருக்கு. மகிழ்ந்தேன். ஏன்னா அதுக்கு அம்மா இல்லை.

குழந்தைகளுக்கு உதவி
என் குழந்தைக்கு அப்பாவும் நான் தான், அம்மாவும் நான் தான். ஊர்ல எல்லாரும் என்ன சொல்வாங்க. எல்லாரையும் சிரிக்க வைச்சான். இப்படி குழந்தைகளை விட்டுட்டு போயிட்டானேன்னு சொல்வாங்க. இது தானே வடிவேலு பாலாஜி குழந்தைக்கும். எல்லாரும் ரெண்டு நாள் ஆறுதல் சொல்வாங்க. அதுக்குப் பிறகு வருமானமே இல்லாம அந்தம்மா குழந்தைகளை வச்சு எப்படி வாழ்க்கையை ஓட்டுவாங்க. அவங்க குழந்தைகளுக்கு உதவி பண்ணணும். இவ்வாறு கண்ணீர் மல்க மதுரை முத்து கூறியுள்ளார்.