»   »  செப்டம்பரில் அமெரிக்காவின் 5 நகரங்களில் இளையராஜாவின் இசை மழை!

செப்டம்பரில் அமெரிக்காவின் 5 நகரங்களில் இளையராஜாவின் இசை மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்(யு.எஸ்): இசை ஞானி இளையராஜாவின் 6 இசை நிகழ்ச்சிகள், ஐந்து முக்கிய அமெரிக்க நகரங்களில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளன.

செப்டம்பர் 10 ம் தேதி , கலிஃபோர்னியா, சான் ஓசே நகரில் முழுக்கவும் தெலுங்கு பாடல்களுடன் முதல் இசை நிகழ்ச்சி தொடங்குகிறது. அடுத்த நாள் அதே நகரில் தமிழ் பாடல்களுடன் மட்டும் இரண்டாவது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Maestro Ilaiyaraaja's concerts in US

சனிக்கிழமை செப்டம்பர் 17 ம் தேதி டல்லாஸ் Curtis Culwell Center ல் பன்மொழிப் பாடல்களுடன் அடுத்த நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டா நகரில் அதே போல் பன்மொழிப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகின்றன

மூன்றாவது வாரம், நியூ ஜெர்ஸி மற்றும் வாஷிங்டன் டிசி யில் செப்டம்பர் 24, 25 தேதிகளில் பன்மொழி இசை நிகழ்ச்சி நடைபெறும்.

இளையராஜாவுடன், 50 க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், பிரபல பின்ணணி பாடகர்கள், பாடகிகள் பங்கேற்கிறார்கள். முன்னதாக 2013 ம் ஆண்டு இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது.

இசைஞானி இளையராஜாவின் 1000 படங்கள் சாதனையை கொண்டாடும் விதமாக 2016ம் ஆண்டின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக , அட்மஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கோடை தணிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகும் வேளையில், அமெரிக்கா முழுவதும் இசை ஞானியின் இன்னிசை, தென்றலாக தவழவருவது சிறப்பு சேர்க்கிறது.

English summary
Maestro Ilaiyaraaja is going to perform 6 concerts in 5 major cities of US in coming September.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil