For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கிருஷ்ணமூர்த்தியாகவே வாழ்ந்த மகாநதி கமல்ஹாசன்

  |
  ULAGANAYAGAN KAMALHAASAN 65TH BIRTHDAY PULLINGO VERSION | V-CONNECT | FILMIBEAT TAMIL

  சென்னை : நவம்பர் 7 உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள். கமல்ஹாசன் பல சாதனைகளை செய்த மாபெரும் கலைஞர் .இந்தியா முழுவதும் எல்லோருக்கும் தெரிந்த நடிகர். 6க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார். கமலின் பல சாதனைகளை இன்று வரை இந்தியாவில் இருக்கும் பல நடிகர்களால் நெருங்க கூட முடியவில்லை. களத்தூர் கண்ணம்மா முதல் தற்போது விஸ்வரூபம்2 வரை 226 படங்களில் நடித்திருக்கிறார் .அதில் நாங்கள் முக்கியமான படமாக பார்க்க கூடிய 'மகாநதி' படத்தை ஒரு முறை திரும்பி பாரக்க போகிறோம்.

  கண்டிப்பாக நீங்கள் நினைப்பது சரிதான் பல முக்கியமான கமல் படங்கள் இருந்தாலும் உங்கள் நேரத்தை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த படத்தை பற்றி மட்டும் சிலவற்றை பகிர போகிறோம்.

  Mahanadhi Kamals one of the best film

  மகாநதி - கமல்ஹாசனின் எழுத்தில் இயக்குனர் சந்தான பாரதி இயகத்தில் உருவான படம் தான் மகாநதி . கிருஷ்ணசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கமல் . கிருஷ்ணசாமி தனது மனைவியை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் வாழும் ஒரு கணவன் . அவரின் பிள்ளைகள் காவேரி மற்றும் பரணி .திருச்சி அருகே இருக்கும் கிராமத்தில் வாழும் விவசாய குடும்பம் தான் அது . அந்த ஊரில் மிகவும் கௌரமாய் தலைநிமிர்ந்து வாழும் குடும்பம்.

  தனுஷ்(கொச்சின் ஹவினாவின்) தூன்டுதலின் பெயரில் சென்னை வரும் குடும்பம் .பின்பு தனுஷ் உடன் கிருஷ்ணசாமி தனது சொத்தை விற்று சிட்பண்ட் துவங்கிறார். உடனிருக்கும் தனுஷ் சிட்பண்டின் பணத்தை ஏமாற்ற மக்களிடம் சிக்கி ஜெயிலுக்கு செல்கிறான் கிருஷ்ணசாமி. அங்கு அவனுக்கு பல இன்னல்கள் நடக்கிறது.

  Mahanadhi Kamals one of the best film

  'மகாநதி ஷங்கர்' என்று பிரபலமான ஷங்கர் படத்தில் கொடூரமான ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் செய்யும் இன்னல்களை தாங்க முடியாமல் தவிக்கும் கிருஷ்ணசாமிக்கு ஜெயிலில் பஞ்சாபிகேசன் தான் ஆதரவு. அப்பாவை பாரக்க ஜெயிலுக்கு வரும் பஞ்சாபிகேசன் மகளுக்கும் கிருஷ்ணசாமிக்கும் காதல் உண்டாகிறது .ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார் கிருஷ்ணசாமி . வெளியே வந்த பின் தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

  அவரது அத்தை இறந்து விடுகிறார் . கிருஷ்ணசாமியின் மகனும் மகளும் காணமால் போய் இருக்கின்றனர் . முதலில் மகனை தேடி கண்டு பிடிக்கும் கிருஷ்ணசாமி தனது மகளை தேடும் பணியில் இறங்குகிறார்,அப்போது தான் தனுஷ் காவேரியை கடத்தி கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழில் செய்யும் விடுதியில் விற்று விட்டது தெரியவருகிறது . பெண்ணை மீட்டு சென்னை திரும்பும் கிருஷ்ணசாமிக்கு தனது மகள் படும் வேதனையை தாங்கிகொள்ள முடியவில்லை. இதனால் இதற்கு காரணமாய் இருந்த தனுஷையும் தொழிலதிபரையும் கொலை செய்கிறான் கிருஷ்ணசாமி. அதற்கு பிறகு 14 வருட சிறை தண்டனைக்கு முடிந்த பின் மீண்டும் குடும்பத்துடன் இணைந்து ஊருக்கே திரும்பி விடுகிறான் கிருஷ்ணசாமி. தன் மகளை ஜெயிலிலும் வெளியியிலும் தனக்கு உதவிய கான்ஸ்டபிள் முத்துசாமி மகனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

  இதில் கிருஷ்ணசாமியாக வாழ்ந்து இருப்பார் கமல் .இந்த படம் தேசிய விருது ,மாநில விருது என விருதுகளை வாங்கி குவித்தது. இந்த படம் கமல்ஹாசனின் படங்களில் மிக முக்கியமான படமாக பாரக்கபடுகிறது . இந்த படத்தின் இறுதியில் வில்லனை கொல்ல முயற்சிக்கும் போது தனது கையையும் சேர்த்து வெட்டி கமல் ஒற்றை கையுடன் நிக்கும் காட்சியை இன்றளவும் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது.

  கமல்ஹாசன் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றிருந்தாலும் மீண்டும் அவர் சினிமாவுக்கு வந்து மகாநதி போல் பல படங்களை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகொள்.

  அவர் நிச்சயம் மேலும் மேலும் பல அசத்தலான மெய்சிலிர்க்கும் படைப்புக்களை கொடுப்பார். அதனோடு மக்களின் சேவகனாகவும் அரசியலில் ஜொலிப்பர் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கு என்றுமே உண்டு.

  English summary
  Kamalhassan has given lots and lots of extrorinary performance in tamil cinema. He has acted in more than 6 language films. One among the best films is Mahanadhi movie. He has not acted in that movie as characer krishnamoorthy. Instead he has lived like krishna moorthy. The life story of a middle claas farmer and the sufferings he undergo is the story. This film received lots of appreciations and awards.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X