»   »  அப்டியே இருக்கியேம்மா... 'மகாநதி' படத்தில் கீர்த்தி சுரேஷ் தோற்றம்!

அப்டியே இருக்கியேம்மா... 'மகாநதி' படத்தில் கீர்த்தி சுரேஷ் தோற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சாவித்ரி ஜெமினி மாதிரி கீர்த்தி சுரேஷும் துல்கரும்- வீடியோ

சென்னை : மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.

சாவித்திரி வேடத்துக்கு கீர்த்தி பொருத்தமானவர் இல்லை என பலரும் விமர்சித்து வந்த நிலையில், தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

மகாநதி

மகாநதி

நாக் அஸ்வின் இயக்கத்தில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்துக்கு தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'மகாநதி' என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சாவித்திரியாக கீர்த்தி

சாவித்திரியாக கீர்த்தி

இப்படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா ஒரு பத்திரிகை நிருபராக வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

விமர்சனம்

விமர்சனம்

சாவித்திரி வாழ்க்கையை படமாக்குவதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதில் சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்றும் விமர்சித்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இதற்கு மறுப்பு தெரிவித்த கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்திரியின் பழக்க வழக்கங்கள் எனக்கும் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்துத் தெரிந்துகொண்டுதான் நடிக்கிறேன் என பதிலளித்திருந்தார்.

சாவித்திரியாகவே மாறிய கீர்த்தி

சாவித்திரியாகவே மாறிய கீர்த்தி

சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் தோற்றம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தற்போது கீர்த்தி சுரேஷின் சாவித்திரி தோற்றமும், ஜெமினி கணேசனாக நடிக்கும் துல்கர் சல்மான் தோற்றமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

English summary
Actress Savithri has been taken as a film. Actress Keerthi Suresh acts in the role of Savithri and Dulquer Salman acts in the role of Gemini Ganesan. Many have criticized Keerthi, but now Keerthi's look was surprised.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X