அடேங்கப்பா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மகேஸ்வரிக்கு இவ்வளவு சம்பளமா? வாழ்வு தான் போங்க!
சென்னை: விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 36வது நாளை எட்டியுள்ளது.
இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேறிய நிலையில், இந்த வாரம் மகேஸ்வரி எவிக்சன் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் 34 நாட்கள் விளையாடிய மகேஸ்வரிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் மகேஸ்வரி
விஜய் டிவியில் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜே மகேஸ்வரியும் போட்டியாளராக கலந்துகொண்டார். விஜேவாக மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் நடித்துள்ளார் மகேஸ்வரி. பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த நாள் முதல் அதிரடியான கருத்துகளால் ரசிகர்களை கவனம் ஈர்த்து வந்தார் மகேஸ்வரி. அசீம், விக்ரமன், ஏடிகே, ஷிவின் என மகேஸ்வரி சண்டை போடாத ஆளே கிடையாது. அதேபோல், ஜாலி என வந்துவிட்டால் பிக் பாஸ் வீட்டில் இருந்த அத்தனை பேரையும் ஒரே சிரிப்பில் வசியப்படுத்திவிடுவார்.

இந்த வாரம் எவிக்சன்
இந்நிலையில், முதல் வாரத்தில் இருந்து தொடர்ந்து எவிக்சன் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்து வந்த மகேஸ்வரி நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இறுதியாக தனலட்சுமி, ராம், மகேஸ்வரி மூவருக்கும் நடந்த போட்டியில், மக்களின் தீர்ப்பு படி மகேஸ்வரி எவிக்சன் செய்யப்பட்டார். அவரை சக போட்டியாளர்கள் அனைவரும் அழுகையும் சிரிப்புமாக வழியனுப்பி வைக்க, ஏடிகே மட்டும் ஒதுங்கி நின்றார். இதனால் பிக் பாஸின் கேமரா அடிக்கடி ஏடிகேவை ஜூம் செய்தது. ஆனால், இறுதியாக கமலுடன் அகம் டிவி வழியே ஏடிகேவிடம் பேசிய மகேஸ்வரி, அவரை சில் செய்துவிட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.

மகேஸ்வரியின் முதல் வீடியோ
பிக் பாஸ் வீட்டை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறுவதாக கமலிடம் கூறிவிட்டு விடைபெற்ற மகேஸ்வரி, இன்று சின்னதாக வீடியோவும் போட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டார். அதில், என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் எனக்கு வருத்தம் இல்லை, மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். இப்போது தான் நான் தெரிந்து கொண்டேன், நீங்கள் எல்லோரும் என்மீது எவ்வளவு அன்பை காட்டியுள்ளீர்கள் என்று. எனது விளையாட்டை ஆதரித்த அனைவருக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.

அடேங்கப்பா இவ்வளவு சம்பளமா?
இந்நிலையில், ஒரு மாதம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த மகேஸ்வரிக்கு பிக் பாஸ் கொடுத்த சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு ஒரு வாரத்திற்கு 3 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டதாம். மொத்தமாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நாட்களை கணக்கிட்டால், இறுதியாக 15 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே மாதத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மகேஸ்வரிக்கே 15 லட்சம் என்றால், இன்னும் விளையாடிக் கொண்டிருக்கும் மற்ற போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என ரசிகர்கள் கணக்குப் போட்டு வருகின்றனர். என்ன இருந்தாலும் மகேஸ்வரிக்கு வாழ்வு தான் போங்க எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











