ராதே ஷ்யாம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படாது... உறுதியாக சொல்லும் தயாரிப்பாளர்கள்
ஐதராபாத் : ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தரவல் பரவியது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
2022 ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் லிஸ்டில் முதலில் இருந்தது ஆர்ஆர்ஆர். இந்த படம் ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்பட்டது. நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவது, தியேட்டர்கள் மூடப்பட்டு வருவது உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் கவலை
ஆர்ஆர்ஆர் படம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் அடுத்து வெளியாக இருக்கும் ராதே ஷ்யாம் படமும் தள்ளிப் போகுமோ என ரசிகர்கள் கவலை அடைந்தனர். பிரபாஸ், பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் ரிலீசாகுமா என்ற குழப்பமும் ஏற்பட்டது.

ராதே ஷ்யாமும் தள்ளிவைப்பா
பான் இந்தியன் படமான ராதே ஷ்யாம் படத்தின் ரிலீசும் ஒத்திவைக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவியது. ராதே ஷ்யாம் படத்தை ஜனவரி 14 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் பரவும் தகவல் பற்றி தயாரிப்பாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்
யுவி கிரியேஷன்ஸ் அளித்துள்ள விளக்கத்தில், ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை. பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் திட்டமிட்டபடி ஜனவரி 14 ம் தேதி திரைக்கு வரும். வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம். ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கும் எண்ணமோ, மாற்றும் எண்ணமோ எங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

புதிய போஸ்டர் ரிலீஸ்
அதோடு ராதே ஷ்யாம் ரிலீசை உறுதி செய்வதற்காக ரிலீஸ் தேதி குறிப்பிடப்பட்ட மற்றொரு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் ரிலீசை உறுதி செய்துள்ளது. தள்ளிவைப்பு என்ற வதந்திகளையும் அடித்து நொறுக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











