சங்கவிகூட பரவாயில்ல.. மாளவிகா, ரீமா சென்னைப் பார்த்தா ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போலயே!

நடிகைகள் மாளவிகாவும், ரீமாசென்னும் சேர்ந்திருக்கும் போட்டோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நடிகைகள் மாளவிகாவும், ரீமாசென்னும் சேர்ந்திருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஒரே படத்தில் ஓஹோ என வாழ்வு என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நிச்சயம் மாளவிகாவுக்கும், ரீமா சென்னிற்கும் பொருந்தும். 1999ம் ஆண்டு உன்னைத் தேடி படத்தில் அஜித்தின் ஜோடியாக மாளவிகா என்ற கதாபாத்திரத்திலேயே அறிமுகமானவர் மாளவிகா.

முதல் படத்திலேயே அவரது பெயரை வைத்து, 'மாளவிகா.. மாளவிகா.. மனம் கவர்ந்தாய் மாளவிகா' என வர்ணிக்கும் அளவிற்கு அவரது அறிமுகம் இருந்தது. ரசிகர்களும் அவரைக் கொண்டாடினார்கள்.

திருமணம்:

திருமணம்:

ஆனால், அப்படத்திற்குப் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற ரேஞ்சுக்கு இறங்கி வந்தார். ஆனாலும், பட வாய்ப்புகள் இல்லை. இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

ரீமா சென்:

ரீமா சென்:

இதேபோல், ரீமா சென்னும் 2001ம் ஆண்டு மின்னலே என்ற ஒரே படத்தின் மூலம், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். மாளவிகா மாதிரி இல்லை ரீமா சென். தொடர்ந்து அவரது நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரங்கள் அவருக்கு அமைந்தது.

மகன்:

மகன்:

செல்லமே, திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்தார். 2011-ல் ராஜபாட்டையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் அளவுக்கு மார்க்கெட் இறங்கியது. அதன்பிறகு ஷிவ்கரன் சிங் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மீண்டும் சந்திப்பு:

மீண்டும் சந்திப்பு:

இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ரீமா சென்னும், மாளவிகாவும் திடீரென்று சந்தித்துக் கொண்டனர். அப்போது கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்ட இருவரும், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

ரசிகர்கள் அதிர்ச்சி:

அந்த படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாளவிகாவும், ரீமா சென்னும் எடை கூடி ஆளே மாறிவிட்டதாக அவர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. கடந்தமாதம் இதே போல், சங்கவியும், மீனாவும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வைரலானது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X