Just In
- 4 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 6 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 7 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அய்யப்பனும் கோஷியும் நடிகர் அனில் நெடுமாங்கட் மரணம்.. ஏரியில் குளித்த போது பரிதாபமாக மூழ்கினார்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமாங்கட் ஏரியில் குளித்த போது பரிதாபமாக மூழ்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷி திரைப்படத்தில் அய்யப்பன் நாயரின் உயர் அதிகாரியாக நடித்து அசத்தியவர் நடிகர் அனில் நெடுமாங்கட்.
அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் சாச்சி கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விலகினார் ஆமிர்கான்.. விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இணைந்த சூப்பர் ஹீரோ.. யாரு தெரியுமா?

நீரில் மூழ்கி மரணம்
நண்பர்களுடன் விடுமுறை நாளை கொண்டாட தொடுபுழாவில் உள்ள மலங்காரா அணையில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீருக்குள் மூழ்கி பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமாங்கட் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு வயது 48.

அய்யப்பனும் கோஷியும் நடிகர்
சமீபத்தில் மறைந்த இயக்குநர் சாச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். அந்த படத்தில் காவல் துறை அதிகாரி அய்யப்பன் நாயரின் உயர் அதிகாரியாக அனில் நெடுமாங்கட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததை ரசிகர்களால் ஒருபோதும் மறக்க முடியாது.

அய்யப்பன் நாயர் பார்ட் 2
கோஷியாக நடித்த நடிகர் பிருத்விராஜின் தந்தையுடன் மோதும் காட்சியில், அய்யப்பன் நாயர் முடியட்டும், அடுத்து பார்ட் 2வில் நாம் இருவரும் மோதிக் கொள்வோம் என சொல்லி சிறப்பாக நடித்திருப்பார். டிவி தொகுப்பாளராக பணியை தொடங்கிய அனில் 2014ம் ஆண்டு Njan Steve Lopez படத்தின் மூலம் அறிமுகமானார்.
|
உடைந்து போன பிருத்விராஜ்
ஒன்றுமில்லை.. இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. உங்களுடைய ஆன்மா சாந்தியடையட்டும் அனில் ஏட்டா என நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் மனம் உடைந்து தனது சமூக வலைதள பக்கங்களில் அவருடைய புகைப்படத்தை பகிர்ந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு மாற்றம்
அனில் ஏட்டாவின் பூத உடல் இன்னமும் மருத்துவமனையில் தான் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் விரைவில் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

2020 இறுதியில் இன்னொரு சோகம்
இந்த ஆண்டு ஏகப்பட்ட திரை ஜாம்பவான்கள் உயிர் பிரிந்துள்ளனர். 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தனியாக லட்சக் கணக்கான மனித உயிர்களை கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், ஏரியில் நண்பர்களுடன் குளித்த போது எப்படி அவர் மூழ்கி இறந்தார் என்பது தெரியவில்லை. 2020 இறுதியில் இன்னொரு சோகத்தை சினிமா உலகம் அடைந்துள்ளது.