ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு அடுத்து ரிலீஸுக்காக பல திரைப்படங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது.

மேலும் பல புது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் ஆரி அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் திரில்லர் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதன் பட பூஜை சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்ற நிலையில் அதில் இப்பொழுது வில்லனாக ஆட்டோ ஷங்கர் பட புகழ் நடிகர் ஷரத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

16 கோடி ஓட்டுக்களை

16 கோடி ஓட்டுக்களை

திறமையான நடிகராக இருந்தும் தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்த ஆரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து அதில் வெற்றியாளராக மகுடம் சூடினார். தமிழில் இதுவரை நடந்த 3 சீசன்களில் இல்லாத அளவிற்கு தனி ஒரு ஆளாக 16 கோடி ஓட்டுக்களை வாங்கிக் குவித்து உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் பெருகிப் போக ஏற்கனவே நடித்திருந்த பல படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இப்பொழுது வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

அதிகாரியாக

அதிகாரியாக

அந்த வகையில் பகவான் மற்றும் அலேகா போன்ற திரைப்படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வர, பிக்பாஸ் நிகழ்ச்சி பின் ஆரிக்கான ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு பெருகி இருப்பதைப் போலவே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் கையில் போலீஸ் அதிகாரியாக முதல்முறையாக நடிக்கும் ஆரி அந்த படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற அதில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

நடிகை வித்யா பிரதீப்

நடிகை வித்யா பிரதீப்

ஷவுரியா புரொடக்ஷன்ஸ் மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப் ஒப்பந்தமாகி இருக்க படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கப்பட உள்ளது.

Recommended Video

ஆரி படத்திற்கு ஆதரவு கொடுங்கள் | PRODUCER ABUBUCKER PRESSMEET | FILMIBEAT TAMIL
சூப்பரான திரில்லர் திரைப்படம்

சூப்பரான திரில்லர் திரைப்படம்

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் ஷரத் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செக்கச்சிவந்த வானம், சண்டைக்கோழி 2, அங்கமலே டைரீஸ் மற்றும் ஆட்டோ சங்கர் சீரிஸ்களில் நடித்து பிரபலமான ஷரத் இதில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்க விரைவில் ஒரு சூப்பரான திரில்லர் திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X