»   »  மரணத்திற்கு முதல் நாள் என்னுடன் பீர் சாப்பிட்டார் கலாபவன் மணி... நடிகர் ஜாபர் இடுக்கி

மரணத்திற்கு முதல் நாள் என்னுடன் பீர் சாப்பிட்டார் கலாபவன் மணி... நடிகர் ஜாபர் இடுக்கி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இடுக்கி: நடிகர் கலாபவன் மணியை அவரது கெஸ்ட்ஹவுஸில் வைத்து மரணத்திற்கு முதல் நாள் சந்தித்தேன். அப்போது அவர் சந்தோஷமாக இருந்தார். ஆரோக்கியமாகவும் இருந்தார். என்னுடன் சேர்ந்து பீர் சாப்பிட்டார் என்று கூறியுள்ளார் மலையாள நடிகர் ஜாபர் இடுக்கி.

ஜாபர் இடுக்கி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரிடம் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலத்தின் சாலக்குடியில் பிறந்தவர் கலாபவன் மணி. ஞாயிற்றுக்கிழமை திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார் மணி.

அதிர்ச்சி அலைகள்

அதிர்ச்சி அலைகள்

அவரது மரண் கேரளாவை மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கூட அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் புகார் கூறியுள்ளார். இதையடுத்து தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் நடிகர்

விசாரணையில் நடிகர்

இந்த நிலையில் சம்பவத்திற்கு முதல் நாள் கலாபவன் மணியுடன் தங்கியிருந்த, சம்பவத்தின்போது உடன் இருந்தவர்களை முதல் கட்டமாக விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர் போலீஸார். அவர்களில் ஒருவர் ஜாபர் இடுக்கி.

ஜாபர் இடுக்கி

ஜாபர் இடுக்கி

ஜாபர் இடுக்கி ஒரு மலையாள நடிகர். கலாபவன் மணியின் நண்பராகவும் இருந்துள்ளார். சம்பவத்திற்கு முதல் நாள் இவர் மணியை அவரது கெஹ்ஸ்ட் ஹவுஸில் வைத்து சந்தித்துள்ளார்.

கெஸ்ட் ஹவுஸில்

கெஸ்ட் ஹவுஸில்

அதுகுறித்து ஜாபர் கூறுகையில், நான் கலாபவன் மணியைச் சந்தித்துப் பேசுவதற்காகவும், புதிய படம் ஒன்றைப் பற்றி விவாதிப்பதற்காகவும்தான் கெஸ்ட் ஹவுஸுக்குப் போயிருந்தேன்.

10 க்கும் மேற்பட்டோர்

10 க்கும் மேற்பட்டோர்

நான் போயிருந்த சமயத்தில் அவரது நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டார் என 10க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

பீர் சாப்பிட்டோம்

பீர் சாப்பிட்டோம்

அங்கு நானும் கலாபவன் மணியும் ஒரே ஒரு பீர் சாப்பிட்டோம். வேறு மது எதுவும் அருந்தவில்லை. மற்றவர்களும் மது அருந்தவில்லை.

ஆரோக்கியமாக இருந்தார்

ஆரோக்கியமாக இருந்தார்

நான் பார்த்தபோது கலாபவன் மணி வழக்கம் போல மகிழ்ச்சியாக காணப்பட்டார். ஆரோக்கியமாகவும் இருந்தார். அவரிடம் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

தற்கொலைக்கு வாய்ப்பில்லை

தற்கொலைக்கு வாய்ப்பில்லை

மணிக்கு எதிரிகள் உண்டா என்பது கேள்விக்குறிதான். அவரை யாரும் கொல்ல நினைக்கக் கூட மாட்டார்கள். அவர் தற்கொலை செய்திருக்கவும் வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்.

உண்மை தெரிய வேண்டும்

உண்மை தெரிய வேண்டும்

மணியின் ரத்தத்தில் விஷம் கலந்திருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சி தருகிறது. இந்த விஷயத்தில் உண்மை வெளிவர வேண்டும். அதைத்தான் மணியின் நண்பர்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

டிஎஸ்பி விசாரணை

டிஎஸ்பி விசாரணை

இதற்கிடையே, ஜாபரை நேரில் வரவழைத்து சிறப்புப் படை டிஎஸ்பி சுதர்சன் விசாரணை நடத்தியுள்ளார்.

English summary
Malayalam actor Jaffer Idukky has said that he met actor Kalabhavan Mani before a day of his death and had a beer with him. Police have grilled Jaffer yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil