»   »  காக்கா முட்டை பட இயக்குநர் காலை தொட்டு கும்பிடுவேன்: பிரபல மலையாள நடிகர் நெகிழ்ச்சி

காக்கா முட்டை பட இயக்குநர் காலை தொட்டு கும்பிடுவேன்: பிரபல மலையாள நடிகர் நெகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காக்கா முட்டை இயக்குனரின் காலைத் தொட்டு கும்பிடுவேன் என்று மலையாள காமெடி நடிகர் ஹரிஸ்ரீ அசோகன் தெரிவித்திருக்கிறார்.

மலையாளத்தில் பிரபல காமெடி நடிகரான ஹரிஸ்ரீ அசோகன் தமிழில் அஞ்சேல் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகிறார். இதில் நடிப்பது குறித்து அவர் கூறும்போது "காமெடியன் என்றால் காமெடி மட்டும்தான் வரும் என்று நினைத்துவிடக்கூடாது.

Malayalam Comedy Actor Speaks about Kakka Muttai

ஒரு நடிகன் என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் திறமை வேண்டும். தமிழ் படத்தில் நடிப்பது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த காக்கா முட்டை படத்தை பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.

தேசிய விருதுக்கு தகுதியான மற்றும் சரியான படத்தைதான் தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் அழுத்தமானது.

காக்காமுட்டை படத்தை என் நெஞ்சில் பச்சை குத்தியதுபோல் பதிய வைத்திருக்கிறேன்.இப்படத்தின் இயக்குனரை நான் பார்த்தால், அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அஞ்சேல் படத்தில் முற்றிலும் ஷிபு சேகர், ரஷீத் என்ற புதுமுகங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், நான் கடவுள் ராஜேந்திரன், சுமன், கலாபவன் மணி உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அஞ்சேல் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

English summary
Malayalam Comedy Actor Harisri Asohan Says in Recent Interview "I Touched the Feet of the Kakka Muttai Director".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil