தாமரை, பாவனி ஏன்?....ஆண் போட்டியாளர்கள் இல்லையா?...பெண்களிடம் வலிமை காட்டிய ஆண் போட்டியாளர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே சுற்றில் போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. தற்போதுள்ள 8 போட்டியாளர்களிடம் இந்த டிக்கெட்டை பெறுபவர் நேரடியாக ஃபினாலே சுற்றுக்கு தகுதி பெற்று விடுவார்.
இதில் முதல் நாளே நிரூப் வெளியேற்றப்பட்டார். டாஸ்க் முடிந்ததும் தாமரை, ஜெயிக்க விரும்பவில்லை என சொல்லிய வார்த்தை பிரச்சனையை கிளப்பியது. இதனால் மற்ற போட்டியாளர்கள் தாமரை மீது கோபப்பட்டனர். பிறகு பேசி சமாதானமும் ஆகினர்.

பிரியங்கா - தாமரை சண்டை
இதைத் தொடர்ந்து இரண்டாவதாக முட்டை டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் தாமரை, பிரியங்கா இடையே நடைபெற்ற சண்டை சோஷியல் மீடியாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இரு தரப்பு ஆதரவாளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

இது நேர்மையான டாஸ்க்கா
பிரியங்கா - தாமரை சண்டை ஒரு புறம் பேசப்பட்டாலும், நெட்டிசன்கள் இந்த கேம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி வருகிறார். அனைவரும் சேர்ந்து குரூப்பாக பேசி வைத்து நிரூப்பை வெளியேற்றியது சரியா, உடல் வலிமையை சோதிக்க முட்டை டாஸ்க் கொடுத்தால் அதிலும் குரூப்பாக சேர்ந்து விளையாடுகிறார்கள். இது நேர்மையாக நடத்தப்படும் போட்டியே அல்ல என கூறி வருகிறார்கள்.

பிரியங்கா கண்ணுக்கே தெரியலியா
முட்டை டாஸ்கின் போது ராஜு மற்றும் சிபி, பாவனியின் முட்டைகளை குறிவைத்து உடைக்க முயற்சி செய்தனர். அதே போல் அமீரும், தாமரை தவிர மற்றவர்களின் முட்டை பக்கம் செல்லவேயில்லை. ஆண் போட்டியாளர்கள் யாரும் பிரியங்காவின் பக்கம் வரவேயில்லை. மாறாக சஞ்சீவ் மற்றும் அமீர், பிரியங்காவிற்கு உதவி செய்தனர்.

பாவனியை குறிவைத்த போட்டியாளர்கள்
பாவனியின் முட்டைகளை உடைக்க அவருடன் பல மணி நேரம் சண்டை போட்ட ராஜு, பக்கத்தில் இருந்த சிபி பக்கமோ, சஞ்சீவ் பக்கமோ போகவில்லை. அதே போல் சஞ்சீவும், பாவனியின் முட்டையை தேடி வந்து உடைத்தார். அதே சமயம் பக்கத்தில் இருந்த பிரியங்கா மற்றும் ராஜுவின் பக்கமோ, அமீர் பக்கமோ செல்லவேயில்லை.

சேஃப் கேம் ஆடினார்களா
பாவனி மற்றும் தாமரையை வெளியேற்ற வேண்டும் என குறிவைத்து இந்த டாஸ்க் நடத்தப்பட்டதாகவும், ஆண் போட்டியாளர்கள் பெண்போட்டியாளர்களை மட்டுமே குறிவைத்தனரே தவிர, தங்களுக்குள் அவர்கள் போட்டி போடாமல் முழுக்க முழுக்க சேஃப் கேம் ஆடி உள்ளனர். இதனை ரசிகர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
Recommended Video

இதுவும் ஸ்கிரிப்ட் தானா
டாஸ்கின் முடிவில் பிரியங்காவிடம் மட்டுமே 7 முட்டைகள் இருந்தன. அதே சமயம் ஆண் போட்டியாளர்களிடம் 10, 9 என்ற கணக்கிலேயே முட்டைகள் இருந்தன. பிக்பாஸ் ஸ்கிரிப்படட் நிகழ்ச்சி என்பதை விஜய் டிவி மீண்டும் மீண்டும் உறுதி செய்வதாக பலர் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











