»   »  இளமையாக இருப்பதால் ஆமிர்கானின் "மனைவி"யாக மாற முடியாமல் போன மல்லிகா ஷெராவத்

இளமையாக இருப்பதால் ஆமிர்கானின் "மனைவி"யாக மாற முடியாமல் போன மல்லிகா ஷெராவத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் அமீர் கானின் மனைவியாக தங்கால் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை தனது இளமையான தோற்றத்தால் தொலைத்து விட்டு நிற்கிறார் பாலிவுட் பியூட்டி மல்லிகா ஷெராவத்.

ஒஸ்தி படத்தில் கலாசலா பாடலுக்கு நடனமாடி தமிழ்நாட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த மல்லிகா ஷெராவத் தான், தற்போது இந்த வாய்ப்பை இழந்து நிற்கிறார்.

தனது உடல் எடையை அதிகரித்து 2 பெண் குழந்தைகளுக்கு மல்யுத்தம் சொல்லிக் கொடுக்கும் தந்தையாக தங்கால் படத்தில் நடிக்கிறார் அமீர்கான்.

 தங்கால்

தங்கால்

அமீர்கானின் அடுத்த படமாக தற்போது உருவாகி வரும் தங்கால் திரைப்படத்தில் அமீர் கானின் மனைவியாக நடிக்க சமீபத்தில் மல்லிகா ஷெராவத்தை தேர்வு செய்திருக்கின்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த வாய்ப்பை நழுவவிட்டு அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார் மல்லிகா ஷெராவத்.

இளமை

இளமை

கதைப்படி அந்த பாத்திரத்திற்கு சற்று வயது அதிகமான நடிகை தான் வேண்டும் என்பதால் அமீர் கானின் மனைவியாக நடிக்கும் வாய்ப்பை மல்லிகா ஷெராவத் தவற விட்டிருக்கிறார். தற்போது அந்த வாய்ப்பை தொலைக்காட்சிகளில் நடித்து புகழ்பெற்ற சாக்க்ஷி தன்வார் என்னும் நடிகை ஏற்றிருக்கிறார்.

 4 பெண் குழந்தைகள்

4 பெண் குழந்தைகள்

அமீர்கானிற்கு 4 பெண் குழந்தைகள் இருப்பது போன்று தங்கால் படம் இருப்பதால் மல்லிகா ஷெராவத்தின் இளமை அவருக்கு தடையாக மாறி, அமீர் கானின் மனைவியாக மாறும் வாய்ப்பை இழக்க வைத்திருக்கிறது. இதனால் தற்போது வருத்தத்தில் இருக்கிறாராம் மல்லிகா ஷெராவத்.

 மகாவீர் சிங்க்

மகாவீர் சிங்க்

வால்ட் டிஸ்னி தயாரிப்பில்,நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் மல்யுத்த வீரர் மகாவீர் சிங்க் போகத்தின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு உருவாகிவருகிறது. தனது இரண்டு மகள்களுக்கும் மல்யுத்தம் கற்றுத் தந்த தந்தைப் பற்றிய கதை தான் "தங்கால்". இப்படம் 2016, டிசம்பர் 23 தேதி ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படக்குழு உள்ளனர்.

English summary
Dangal is a biopic on the life of wrestler Mahavir Phogat. Aamir Khan will portray the character of the wrestler and has gained a lot of weight for the role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil