ஜோதிகா பர்த்டே.. ‘காதல்’ பரிசு கொடுத்த மம்மூட்டி.. ஹாஷ்டேக்கே டிரெண்டாகிடுச்சே!

திருவனந்தபுரம்: 70 வயதை கடந்த நடிகருடன் ஜோதிகா நடிக்கிறாருன்னு சமீபத்தில் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

செய்திக்குள் சென்று பார்த்தால் அந்த 70 வயது நடிகர் வேற யாருமில்லை, நம்ம மம்மூக்கா என்று ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில், ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மம்மூட்டி கொடுத்துள்ள 'காதல்' பரிசு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

44 வயதினிலே

44 வயதினிலே

சிம்ரனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக கெத்துக் காட்டி வந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து குழந்தைகள் குடும்பம் என சில காலம் சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்த நிலையில், 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களாக நடித்து வரும் அவர், தற்போது தனது 44வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

மம்மூட்டிக்கு ஜோடி

மம்மூட்டிக்கு ஜோடி

ரகுமான், சசிகுமார் என தனது ரீ என்ட்ரியில் ஜோடிகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா மலையாள திரையுலகின் முன்னணி நடிகருக்கு ஜோடியாக அடுத்து நடிக்க உள்ளார் என்கிற தகவல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. 70 வயதை கடந்த நிலையில், இன்னமும் துல்கர் சல்மானின் தம்பியாக போட்டிப் போட்டு பல படங்களில் நடித்து வரும் மம்மூட்டியின் அடுத்த படம் குறித்த ஹாட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

காதல் பரிசு

காதல் பரிசு

ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் மம்மூட்டி. 'காதல்' என்கிற டைட்டிலில் பழைய போட்டோ ஃபிரேமில் ஜோதிகா மற்றும் மம்மூட்டி இருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

70 வயதிலும் காதல்

70 வயதிலும் காதல்

71 வயதாகும் நடிகர் மம்மூட்டியின் புதிய பட டைட்டில் காதல் என்பதை அறிந்த ரசிகர்கள், இந்த வயதிலும் காதல் கதையில் நடிக்க அழகன் மம்மூட்டியால் மட்டுமே முடியும் என பாராட்டி வருகின்றனர். ரம்யா பாண்டியன் உடன் மம்மூட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படமும் விரைவில் வெளியாக உள்ளது. மம்மூட்டி, ஜோதிகா நடிக்கும் இந்த படத்தை மம்மூட்டி தயாரிக்க ஜியோ பேபி என்பவர் இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X