Don't Miss!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மம்முட்டியின் ‘ரோர்சாச்’ சென்சார் அப்டேட்… புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...
திருவனந்தபுரம்: மலையாள மெகா ஸ்டார் தற்போது ரோர்சாச், நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நிசாம் பஷீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரோர்சாச்' திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரோர்சாச் படத்தின் சென்சார் அப்டேட், புதிய ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிரட்டலாக வெளியான மம்முட்டியின் 'ரோர்சாச்’ செகண்ட் லுக் போஸ்டர்: இது அந்த மாதிரி திரில்லர் மூவி

மெகா ஸ்டார் மம்முட்டி
மல்லுவுட் மெகா ஸ்டார் மம்முட்டி 70 வயதிலும் இளம் நடிகர்களுக்கு செம்ம டஃப் கொடுத்து நடித்து வருகிறார். அவர் தற்போது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்', நிஷாம் பஷீர் இயக்கத்தில் 'ரோர்சாச்' ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், ரோர்சாச் படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

மிரட்டிய மம்முட்டியின் போஸ்டர்கள்
அதேபோல் மம்முட்டியின் 'ரோர்சாச்' திரைப்படமும் இப்போது மலையாள ரசிகர்களிடம் டிரெண்டிங்கில் உள்ளது. 'கெட்டியோலானு என்டே மலாக்கா' படத்தின் மூலம், பலரது கவனத்தையும் ஈர்த்த நிசாம் பஷீர், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முதல் படமே மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனதால், மம்முட்டியின் ரோர்சாச் படத்தின் எதிர்பார்ப்பும் தாறுமாறாக எகிறிப் போயுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து மம்முட்டியின் மிரட்டலான போஸ்டர்கள் வெளியாகி மாஸ் காட்டியது. அதேபோல், படக்குழு வெளியிட்டு ரோர்சாச் மேக்கிங் வீடியோவும் செம்ம வைரலானது.

ரோர்சாச் சென்சார் அப்டேட்
இந்நிலையில், 'ரோர்சாச்' படத்தின் சென்ஸார் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்சன் திரில்லர் ஜானரில் டெரராக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு யு/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதால் யு/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கேங்ஸ்டர் லுக்கில் மம்முட்டியின் ஆக்சன் ட்ரீட்டை சுவைக்க அவரது ரசிகர்களும் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சொன்ன தேதியில் படம் வெளியாகவில்லை.

புதிய ரிலீஸ் தேதி
'ரோர்சாச்' படம் ஏற்கனவே அறிவித்தபடி செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸாகாத நிலையில், ஒருவாரம் தாமதமாக அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது. புதிய ரிலீஸ் தேதியால் மம்முட்டி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் படத்தில் Halloween-style-இல் ரொம்பவே அதிர்ச்சியான கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளதாக இயக்குநர் நிசாம் பஷீர் தெரிவித்துள்ளார். ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் திரில்லர் ஜானர் படமான 'ரோர்சாச்', நிச்சயம் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.