»   »  தாரை தப்பட்டை முழங்க... மலையாளத்தில் அறிமுகமாகும் வரலட்சுமி... மம்முட்டி ஜோடி?

தாரை தப்பட்டை முழங்க... மலையாளத்தில் அறிமுகமாகும் வரலட்சுமி... மம்முட்டி ஜோடி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தாரைதப்பட்டை படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார் நடிகை வரலட்சுமி.

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மகள் வரலட்சுமி. போடா போடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர்.

சமீபத்தில் பாலா இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாரை தப்பட்டை படம் ரிலீசானது. இப்படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

மலையாளத்தில்...

இந்நிலையில், தற்போது மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார் வரலட்சுமி. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே உறுதி செய்திருக்கிறார்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்கவிருக்கிறேன். அவருடன் வேலைசெய்யவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் என் இயக்குநர் நிதின் பனிக்கருக்கும் நன்றி' என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

முதல் படம்...

முதல் படம்...

பிரேமம் படத்தில் நிவின்பாலிக்கு தந்தையாக ஒரு காட்சியில் வந்து கெத்து காட்டிய ரெஞ்சி பனிக்கரின் மகன் தான் இயக்குநர் நிதின் பனிக்கர். இப்படம் அவருக்கும் முதல் படமே.

போலீசாக மம்முட்டி...

போலீசாக மம்முட்டி...

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மம்முட்டி இப்படத்தில் போலீசாக நடிப்பதாக கூறப்படுகிறது.

ஷூட்டிங்...

ஷூட்டிங்...

இன்னும் டைட்டில் முடிவுசெய்யப்படாத நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Mammootty, the megastar of Mollywood, will share the screen with Varalaxmi Sarathkumar, the popular Tamil actress and daughter of actor Sarathkumar, in Nithin Renji Panicker's directorial debut.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil