»   »  மம்மூட்டி மகள் திருமணம்: விஜய், அஜீத் பங்கேற்பு

மம்மூட்டி மகள் திருமணம்: விஜய், அஜீத் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகள் சுருமிக்கும், டாக்டர் முகம்மது ஹான் சையத்துக்கும் கொச்சியில்திருமணம் நடந்தது. தமிழ் நடிகர்கள் விஜய், அஜீத் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகினர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

நடிகர் மம்ட்டியின் மூத்த மகள் சுருமி. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹான் சையத்துக்கும்கொச்சியில் திருமணம் நடந்தது.

கொச்சியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல் வளாகத்தில் இஸ்லாமிய முறைப்படிதிருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் தமிழ் நடிகர்கள் விஜய், அஜீத், மலையாள நடிகர்கள் மோகன் லால், நெடுமுடி வேணு,பாலச்சந்திர மேனன், முகேஷ், ஜெயராம், ஜெகதீஸ்குமார், தெலுங்கு நடிகர் சாய்குமார் மற்றும் கருணாகரன்உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு வந்தவர்களை மம்மூட்டி, அவரது மனைவி சுலு, மகன் துல்கார் சல்மான் ஆகியோர் வரவேற்றனர்.

Please Wait while comments are loading...