நாங்க வசூல் மட்டுமில்லீங்க... விருதுகளையும் குவிப்போம்ல... நிரூபித்த மாநாடு
சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் மாநாடு.
Recommended Video
இந்தப் படம் தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில் படம் நார்வே தமிழ் திரைப்பட திருவிழாவில் 4 விருதுகளை குவித்துள்ளது.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் மாநாடு. இந்தப் படம் தீபாவளி பந்தயத்தில் இருந்து விலகினாலும் வசூல் பந்தயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.

சிறப்பான சிம்பு, எஸ்ஜே சூர்யா
சிம்புவிற்கும் இந்தப் படம் ஏற்றத்தை தந்துள்ளது. மன்மதன் படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான சிறப்பான படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

50 நாட்களை கடந்து சாதனை
இந்தப் படம் தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருவது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் துவக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும் அடித்து நொறுக்கிவிட்டு 50வது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சுரேஷ் காமாட்சி குஷி
தொடக்கம் எப்படியாக இருந்தாலும் முடிவை சிறப்பாக்க வேண்டும் என்றும் 100 நாள் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வெற்றி என்பது தனக்கு தானே கூவிக் கொள்வதல்ல என்றும் தனக்கு தானே அறிவித்து கொள்வது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

படக்குழுவினருக்கு நன்றி
இந்த இக்கட்டான காலகட்டத்தில் படம் தொடர்ந்து 50 நாட்களை கடந்துள்ளது சாதாரண விஷயமில்லை என்றும் அதற்கு நாயகன், சிம்பு, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் அவர் மேலும் நன்றி தெரிவித்துள்ளார்.

4 விருதுகள் குவிப்பு
இந்நிலையில் படத்தின் மகுடத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தற்போது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் படம் 4 விருதுகளை அள்ளியுள்ளது. சிறந்த இயக்குநராக வெங்கட் பிரபு, சிறந்த வில்லனாக எஸ்ஜே சூர்யா, சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா மற்றும் சிறந்த எடிட்டிங்கிற்காக பிரவீன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒய்ஜி மகேந்திரனுக்கு விருது
மேலும் படத்தில் நடித்த ஒய்ஜி மகேந்திரனுக்கு கலைச்சிகரம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதுகளை படம் குவித்துள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு நார்வே தமிழ் திரைப்பட விழா குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











