»   »  இதயம் நொறுங்கிவிட்டது, இதயம் வலிக்கிறது: ட்வீட்டிய த்ரிஷா, ஹன்சிகா

இதயம் நொறுங்கிவிட்டது, இதயம் வலிக்கிறது: ட்வீட்டிய த்ரிஷா, ஹன்சிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கிலாந்தில் பாப் இசை நிகழ்ச்சியின்போது நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அறிந்து திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகி அரியானா கிராண்டின் நிகழ்ச்சி நடந்தது. அப்போது குண்டுகள் வெடித்ததில் 22 பேர் பலியாகினர், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


இது குறித்து இந்திய திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


த்ரிஷா

இதயம் நொறுங்கிவிட்டது. என்ன மாதிரியான ஆட்கள் இப்படி செய்வார்கள்!?! மான்செஸ்டருக்காக பிரார்த்தனை செய்கிறேன் என த்ரிஷா ட்வீட்டியுள்ளார்.


ஹன்சிகா

மான்செஸ்டரை நினைத்து என் இதயம் வலிக்கிறது. இது கவலையானது மற்றும் அதிர்ச்சியானதும் கூட. பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. என ஹன்சிகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


ஷாருக்கான்

அப்பாவி உயிர்கள் பலியானது குறித்து அறிந்த நாட்களை துவங்குவது மிகவும் வருத்தமானது. இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்வீட்டியுள்ளார்.


ரித்தேஷ் தேஷ்முக்

ரித்தேஷ் தேஷ்முக்

மான்செஸ்டர் செய்தி கவலையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.. இந்த கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பாலிவுட் நடிகரும், ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.


English summary
Indian celebrities took to twitter to express their shock and deepest condolences to the victims of Manchester attack.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil