»   »  திருமணமான ஆறே மாதத்தில் நடிகையை வீட்டை விட்டு விரட்டிய கணவர்

திருமணமான ஆறே மாதத்தில் நடிகையை வீட்டை விட்டு விரட்டிய கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை மந்தனா கரீமியை அவரது கணவர் வீட்டை விட்டு விரட்டிவிட்டாராம்.

ஈரானை சேர்ந்த மந்தனா கரீமி பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மேலும் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார்.

தொழில் அதிபர் கவுரவ் குப்தாவை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.

வழக்கு

வழக்கு

திருமணமான ஆறு மாதத்திற்குள் மந்தனாவை கவுரவ் வீட்டை விட்டு விரட்டிவிட்டாராம். கடந்த 7 வாரங்களாக மந்தனா வெளியே தங்கியுள்ளார். இந்நிலையில் மந்தனா தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

காதல்

காதல்

நான் கணவரை இன்னும் காதலிக்கிறேன். நான் விவாகரத்து கோரவில்லை. வீட்டை விட்டு என்னை வெளியேற்றியது தவறு என்கிறேன் என்று மந்தனா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து

விவாகரத்து

என்னிடம் இருந்து விவாகரத்து பெற விரும்புவதாக கவுரவ் தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். அதற்குள் விவாகரத்து பெற விரும்பினால் எதற்காக திருமணம் செய்தார் என்று கேட்கிறார் மந்தனா.

மதம்

மதம்

கவுரவை திருமணம் செய்து கொள்ள இஸ்லாமிய பெண்ணான நான் இந்து மதத்திற்கு மாறினேன். அவர் கூறியதால் நடிப்பு தொழிலையும் விட்டேன். என் மாமியாருக்கு என்னை கண்டாலே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார் மந்தனா.

English summary
Ex-Bigg Boss contestant Mandana Karimi, who got married to businessman Gaurav Gupta in January 2017 in a lavish ceremony, has now filed a domestic violence case against him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil