»   »  ராக்கம்மா கையைத் தட்டு.. மீண்டும் சேருவார்களா "தளபதி"கள்?

ராக்கம்மா கையைத் தட்டு.. மீண்டும் சேருவார்களா "தளபதி"கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் ஹிட் கூட்டணி என்று பெயர் பெற்றவர்கள் இளையராஜா, மணிரத்னம். இன்று இருவரும் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். ரசிகர்கள் இவர்களைக் கொண்டாடுகின்றனர்.

நாயகன், தளபதி, மவுனராகம் படங்களின் மூலம் காலத்தால் அழியாத ஹிட் பாடல்களைக் கொடுத்த இந்தக் கூட்டணி, தளபதி படத்துக்குப் பின் பிரிந்து விட்டது.

இந்தக் கூட்டணி பிரிந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. ஏதாவது ஒரு படத்தில் இருவரும் ஒன்று சேர்வார்கள் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு இவர்கள் இணையாதது ஏமாற்றமே. இவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் குறித்து பார்க்கலாம்.

மவுன ராகம்

மவுன ராகம்

தமிழில் இளையராஜா-மணிரத்னம் இருவரும் முதன்முறையாக ஒன்றிணைந்த படம் பகல் நிலவு. முரளி-ரேவதி இணைந்து நடித்திருந்தனர். தொடர்ந்து மோகன், அம்பிகாவை வைத்து இதயக் கோவில் படத்தை எடுத்தார். முதலிரண்டு படங்களிலும் இளையராஜாவின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. 3 வது முறையாக இருவரும் சேர்ந்து பணியாற்றிய மவுன ராகம் இருவருக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மோகன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் 1986 வெளியான மவுனராகம் திரையரங்குகளில் 175 நாட்களைக் கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது.

தேசிய விருது

தேசிய விருது

இப்படத்தில் இடம்பெற்ற மன்றம் வந்த தென்றலுக்கு, சின்ன சின்ன வண்ணக்குயில் போன்ற பாடல்கள் இன்றைய தலைமுறையையும் ரசிக்க வைத்துள்ளன. பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் 'தமிழின் சிறந்த எதிர்காலப் படம்' என்ற பிரிவில் தேசிய விருதையும் வென்றது.

நாயகன்

நாயகன்

மவுன ராகத்துக்குப் இந்தக் கூட்டணியில் வெளியான நாயகன் பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்டது. கமல், சரண்யா, ஜனகராஜ், நாசர் ஆகியோர் சேர்ந்து நடித்திருந்த இப்படத்தில் எல்லாப் பாடல்களுமே ஹிட்டடித்தன. இந்திய சினிமாவின் சிறந்த 100 படங்களில் ஒன்றாக இன்றளவும் நாயகன் இருக்கிறது. காரணம் ராஜாவின் இசை. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த கலையமைப்பு என 3 பிரிவுகளில் இப்படம் தேசிய விருதுகளை வென்றது. இதில் இடம்பெறும் நீங்க நல்லவரா? கெட்டவரா? வசனத்தை இன்றும் எங்காவது ஒரு இடத்தில் நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

தளபதி

தளபதி

அக்னி நட்சத்திரம், அஞ்சலி ஹிட்களுக்குப் பின் ரஜினியை வைத்து தளபதி படத்தை மணிரத்னம் இயக்கினார். நட்புக்கு உதாரணம் சொன்ன தளபதியில் நண்பர்களாக மம்முட்டி-ரஜினி நடித்திருந்தனர். அரவிந்த் சாமி, ஷோபனா, ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், பானுமதி, கீதா முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் 1991 ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ராக்கம்மா கையைத் தட்டு, காட்டுக்குயிலு மனசுக்குள்ள போன்ற பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன.

இளையராஜா-மணிரத்னம் இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் தளபதி. தளபதி படத்துக்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைத்த மணிரத்னம் தொடர்ந்து அவருடனேயே நடை போட்டு வருகிறார்.

English summary
Mani Ratnam- Ilayaraja Coupling Movies Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil