twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Ponniyin Selvan Box Office: 400 கோடியை நோக்கிய சோழர்களின் பயணம்.. பொன்னியின் செல்வன் வசூல் நிலவரம்!

    |

    சென்னை: ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டு மதுராந்தகனுக்கு அருள்மொழி வர்மன் முடி சூட்டிய வரலாற்றை வைத்துக் கொண்டு இப்படியொரு வரலாற்று காவியத்தை அமரர் கல்கி உருவாக்கியது தான் பொன்னியின் செல்வன் கதைக்கு கிடைத்த வெற்றியே.. என்று சொல்லலாம்.

    இயக்குநர் மணிரத்னம் பல ஆண்டுகளாக இந்த கனவு படத்தை எடுக்க போராடி கடைசியில் இந்த ஆண்டு ரசிகர்களின் பார்வைக்கு பொன்னியின் செல்வன் படத்தை படைத்து விட்டார்.

    பொன்னியின் செல்வன் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த வசூல் நிலவரம் குறித்து இங்கே பார்ப்போம்..

    இந்தியில் 25 கோடி வரை

    இந்தியில் 25 கோடி வரை


    பல பாலிவுட் படங்களே இந்தி பெல்ட்டில் தடுமாறி வரும் நிலையில், இதுவரை அங்கே 25 கோடி வரை பொன்னியின் செல்வன் கலெக்ட் செய்திருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் நல்ல ஓப்பனிங்காகவே பார்க்கப்படுகிறது. விக்ரம் வேதா மற்றும் ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன் நடித்த குட்பை திரைப்படங்கள் பெரிய வசூலை குவிக்காத நிலையில், ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பாக்ஸ் ஆபிஸுக்கு உதவும் சர்ச்சை

    பாக்ஸ் ஆபிஸுக்கு உதவும் சர்ச்சை

    பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக காட்ட முயற்சித்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜ ராஜ சோழனை பற்றி அறிந்து கொள்ளவும் இத்தனை சர்ச்சைகள் நிலவும் அளவுக்கு படத்தில் அப்படி என்னதான் இருக்கு என்பதை பார்த்து விடுவோமே என்கிற ஆவல் தான் 2வது வாரத்திலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

    சூடு பிடித்த வீக்கெண்ட்

    சூடு பிடித்த வீக்கெண்ட்

    வியாழன், வெள்ளி சற்றே கூட்டம் குறைந்தாலும், சனிக்கிழமையான நேற்றும், ஞாயிற்றுக்கிழமையான இன்று பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ரசிகர்கள் உலகளவில் பெரிதும் ஆர்வம் காட்டி வருவது ப்ரீ புக்கிங்கை பார்த்தாலே தெரிகிறது. அனைத்து மல்டி பிளக்ஸ்களும் சனி மற்றும் ஞாயிறு நிரம்பி வழிகிறது. வேறு எந்தவொரு பெரிய படமும் வராத நிலையில், சோழர்களின் பயணம் பெரிய பாக்ஸ் ஆபிஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

    360 கோடி வசூல்

    360 கோடி வசூல்

    பொன்னியின் செல்வன் வெளியாகி 9 நாட்கள் கடந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 360 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வார இறுதிக்குள் 400 கோடி கிளப்பில் பொன்னியின் செல்வன் இணையுமா? அல்லது மேலும், சில நாட்களை எடுத்துக் கொள்ளுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை 7 நாட்களில் பொன்னியின் செல்வன் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளி வரை

    தீபாவளி வரை

    தீபாவளி வரை தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாத நிலையில், ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வனுக்கு செம ஜாக்பாட் தான். தீபாவளிக்கு பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் சர்தார் படமே வெளியாகிறது. மேலும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Mani Ratnam's dream project Ponniyin Selvan collects a huge at Day 9 Box Office Collection reports are here. Fans from all ages gathering at theaters and watch the epic saga in theaters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X