Don't Miss!
- News
"பாய்காட் பதான்".. கொச்சைபடுத்தாதீங்க! பாஜகவினரையே மறைமுகமாக விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக்
- Sports
சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
Bigg Boss Tamil 6: இந்த வாரம் கணிப்பு மிஸ் ஆகல.. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது அவர் தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் மணிகண்டன் தான் வெளியேறியதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன. புத்தாண்டு பண்டிகையை ஜாலியாக வீட்டில் சொந்தங்களுடன் சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் மணிகண்டன் கொண்டாட கிளம்பி விட்டார்.
கடந்த வாரம் ஷிவினுக்கு பதிலாக மணிகண்டன் வெளியே போயிருக்கலாம் என ஷிவின் சொன்னதும் ரசிகர்கள் அப்படி கைதட்ட காரணமும் அதுதான் என்கின்றனர்.
ஒரு வழியாக மக்கு மணி வெளியேறிவிட்டார் என விக்ரமன் ரசிகர்கள் ஏகப்பட்ட ட்ரோல்களையும் சோஷியல் மீடியாவில் போட்டு வருகின்றனர்.
துணிவு டிரைலர் வெளியானதும் டிரெண்டான நெல்சன்.. இப்போ அண்ணா செம ஹாப்பியா இருப்பாரு!

அசீம் நண்பர்
பிக் பாஸ் வீட்டில் அசீமுக்கு யாருமே நண்பர்களாக இல்லாத நிலையில், யார் என்ன சொன்னாலும் தான் அசீமுக்கு சப்போர்ட் செய்வேன் என மணிகண்டன் பலமுறை அசீமுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அசீமுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் அப்படியே நாமும் சேவ் ஆகிவிடலாம் என்பதற்காகத்தான் மணிகண்டன் அசீமுக்கு சப்போர்ட் செய்கிறார் என்றும் ட்ரோல்கள் குவிந்தன.

பை பை மணி
இந்த வாரம் ரச்சிதாவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் எவிக்ஷனுக்கான நாமினேஷனில் இடம்பிடித்து இருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே டேஞ்சர் ஜோனில் இருந்த மணிகண்டன் தான் இந்த வாரம் வெளியேறுவார் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேறி உள்ளார் மணிகண்டன் என தகவல்கள் கசிந்துள்ளன.

சகோதரி வந்துட்டு போனதும்
மணிகண்டனுக்கு ஓட்டுப் போடுங்க என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டதில் இருந்தே மணிகண்டன் எவிக்ஷன் ஆகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், ஃப்ரீஸ் டாஸ்க் அதிரடியாக இந்த வாரம் வைக்கப்பட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளே வந்து அண்ணனை பார்த்து விட்டு தனது டிரைவர் ஜமுனா படத்தின் ப்ரமோஷன் செய்த நிலையில், இந்த வாரம் மணிகண்டன் எவிக்ட் ஆகி விட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதிக முறை கேப்டன்
பிசிக்கல் டாஸ்க் என வந்து விட்டால் மணிகண்டன் சும்மா முரட்டுத் தனமாக உள்ளே புகுந்து அனைவரையு வீழ்த்தி விட்டு வெற்றி பெறுவார். பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் அதிக முறை கேப்டனாகவும் ஆகி உள்ள மணிகண்டன் டாப் 5ல் கூட இருக்க மாட்டார் என அவரது தோழி மைனா சொன்னது போலவே இந்த வாரம் வெளியேறி உள்ளார்.