»   »  எல்லாம் மஞ்சு வாரியாரின் சதி!- திலீப் திடுக் குற்றச்சாட்டு

எல்லாம் மஞ்சு வாரியாரின் சதி!- திலீப் திடுக் குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை கடத்தல் வழக்கில் தான் சிக்கியதில் மஞ்சு வாரியார் மிகப்பெரிய சதி செய்திருப்பதாக நடிகர் திலீப் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகையை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரு முறை ஜாமீன் கோரப்பட்டும், நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனால் திலீப் மீண்டும் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். தனது வக்கீல் சரியாக வாதாடாததால்தான் ஜாமீன் கிடைக்கவில்லை என்று கருதிய திலீப் வக்கீலை மாற்றியுள்ளார் திலீப். அவருக்காக இப்போது கேரள உயர் நீதிமன்ற வக்கீல் ராமன் பிள்ளை வாதாடுகிறார். ராமன் பிள்ளை மூலம் மீண்டும் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.

பல்சர் சுனிலைப் பார்த்ததே இல்லை

பல்சர் சுனிலைப் பார்த்ததே இல்லை

அந்த மனுவில், "நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறி உள்ளனர். பல்சர் சுனிலை நான் பார்த்ததே இல்லை. ஒருபோதும் அவரை சந்தித்ததும் கிடையாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே அவரை எனக்கு தெரியும் என்று கூறி உள்ளனர்.

மஞ்சு வாரியார் சதி

மஞ்சு வாரியார் சதி

இதற்கு என் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியாரின் சதி உள்ளது. நடிகை கடத்தப்பட்ட சம்பவத்திற்கு மறுநாள், மலையாள நடிகர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற மஞ்சு வாரியார், என்னை இந்த குற்றச்சாட்டில் இழுத்து விடும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.

மஞ்சு - ஸ்ரீகுமார் தொடர்பு

மஞ்சு - ஸ்ரீகுமார் தொடர்பு

இதுபற்றி நான், போலீசாரிடம் கூறி உள்ளேன். ஏ.டி.ஜி.பி. சந்தியா என்னிடம் விசாரித்தபோது, மஞ்சுவா ரியார் பற்றியும், அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் பற்றியும் சில முக்கிய தகவல்களை தெரிவித்தேன். மஞ்சு வாரியாருக்கும், ஸ்ரீகுமார் மேனனுக்குமான தொடர்பு பற்றி கூறியபோது, ஏ.டி.ஜி.பி. சந்தியா அங்கிருந்த காமிராக்களை அணைத்து விட்டார்.

மாட்டிக் கொண்டேன்

மாட்டிக் கொண்டேன்

இந்த சதியில் என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சி நடந்தது. அதில், நான் மாட்டிக் கொண்டேன்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

English summary
In his second bail application, Malayalam actress Dileep accused his ex-wife Manju Warrier for conspiring against him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil