»   »  என் தாயே இறந்து போய் விட்டார் - நடிகர் மனோபாலா கண்ணீர்

என் தாயே இறந்து போய் விட்டார் - நடிகர் மனோபாலா கண்ணீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் தாயே இறந்து போய் விட்டார். இனிமேல் யார் இருக்கிறார் எங்களுக்கு என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா.

மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய மனோபாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், கடைசி வரை நடிப்பை விடாமல் தொடர்ந்தவர் ஆச்சி மனோரமா. மாலையிட்ட மங்கை தொடங்கி கடைசி வரை அவர் நடித்த படங்கள் அனைத்திலும் விதம் விதமாக நடித்து அனைவரையும் மகிழ்வித்தவர் அவர்.

Manobala upset with Manorama's death

அவரைப் போல ஒரு நடிகை இனிமேல் கிடைக்க மாட்டார். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறி விடும் சிறப்பு பெற்றவர் மனோரமா.

கடைசி முறையாக என்னைப் பார்த்தபோது கூட மனோ மனோ என்று பாசமாக அழைத்து மகிழ்ந்தார். அனைவருடனும் பாசமாக பழகக் கூடியவர் மனோரமா.

மரணமடையும் முன்பு தனது தாயின் படத்தைப் பார்த்துள்ளார் மனோரமா. அப்படியே அவரது உயிர் பிரி்ந்துள்ளது. மனோரமாவின் தாயார் உயிருடன் இருக்கும்போது மனோரமா ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும் வரை வாசலிலேயே அமர்ந்திருப்பார் அவரது தாயார்.

எனது அம்மா இறந்து விட்டது போலவே உணர்கிறேன். இனிமேல் எங்களுக்கெல்லாம் யார் இருக்கிறார் என்று கண்ணீர் மல்கக் கூறினார் மனோபாலா.

English summary
Actor - Director Manobala has said that Actress Manorama is a mother to all the artistes. By her death, we have lost our mother, he added with grief.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil