»   »  முடிந்தது மனோஜ்-நந்தனா கல்யாணம்

முடிந்தது மனோஜ்-நந்தனா கல்யாணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ், நடிகை நந்தனா ஆகியோரின் திருமணம் கேரளமாநிலம் கோழிக்கோட்டில் விமரிசையாக நடந்தது.

தாஜ்மஹால் மூலம் நடிகராக அறிமுகமான மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் ஆதரவு தெரிவித்ததால் திருமணம் நிச்சயமானது.

இருவரின் திருமணம் கோழிக்கோட்டில் கேரள முறைப்படி நடந்தது. கோழிக்கோட்டில் உள்ள ஆசிர்வாத்திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு திருமணம் நடந்தது. புரோகிதர்கள்

மந்திரங்கள் முழங்க வைதீக முறைப்படி திருமணம் நடந்தது.

இசைஞானி இளையராஜாவும், அவரது மனைவி ஜீவாவும் தாலி எடுத்துக் கொடுக்க, நந்தனா கழுத்தில் மனோஜ்தாலி கட்டினார்.

திருமணத்தில் பாரதிராஜா குடும்பத்தினர், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழ்த திரையுலகைச்சேர்ந்த நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், ராதாரவி, பாண்டியன், ராஜா, நடிகைகள் ராதிகா, ராதா, படஅதிபர்கள் பஞ்சு அருணாச்சலம், சித்ரா லட்சுமணன், முரளிதரன், சுவாமிநாதன், பி.ஜி.ஸ்ரீகாந்த், இயக்குநர்கள்ரத்னகுமார், ஆர்.கே.செல்வமணி, பார்த்தி பாஸ்கர் மற்றும் மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் டிசம்பர் மாதம் திருமண வரவேற்புக்கு பாரதிராஜா ஏற்பாடு செய்துள்ளார்.

Read more about: manoj weds nandana

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil