Bigg Boss Tamil 6: சக்கு சக்கு வத்திக்குச்சி.. மன்சூர் அலி கான் பிக் பாஸ் வீட்டுக்கு வரப்போறாரா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலி கான் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமல்ஹாசன் தொகுத்து வழங்க வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பமாகிறது.
24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு முதல்
வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 9ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அதற்கான படப்பிடிப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் வீட்டை மீடியாக்கள் சென்று பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் இந்த ஆண்டும் அரங்கேற உள்ளன.

போட்டியாளர்கள் லிஸ்ட்
நடன இயக்குநர் ராபர்ட், விஜய் டிவி சீரியல் நடிகை ரக்சிதா, நடிகை விசித்ரா, சென்னையை சேர்ந்த மாடல் அழகி ஷெரினா, இலங்கை ஆங்கர் ஜனனி என பல பிரபலங்கள் இந்த முறை பிக் பாஸ் சீசன் 6 வீட்டை அலங்கரிக்க உள்ளனர். மேலும், விஜய் டிவியை சேர்ந்த பலரது பெயர்களும் அடிபட்டு வருகின்றன.

மன்சூர் அலி கான்
விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய "சக்கு சக்கு வத்திக்குச்சி" பாடல் மீது மீண்டும் டிரெண்டானவர் நடிகர் மன்சூர் அலி கான். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ல் அவரை போட்டியாளராக உள்ளே கொண்டு வர பிக் பாஸ் டீம் தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிஆர்பி எகிறும்
மன்சூர் அலி கான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தால் காமெடிக்கும் டிஆர்பிக்கும் பஞ்சமே இருக்காது என்றும் மன்சூர் அலி கானுக்குத்தான் ரசிகர்கள் முதலில் ஆர்மியை உருவாக்குவார்கள் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

சுவாரஸ்யம் கூடுமா
கடந்த சில சீசன்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசிக்கல் டாஸ்க் எல்லாம் குறைவாக உள்ளதாகவும், போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொண்டு மிக்சர் சாப்பிடுகின்றனர் என்கிற விமர்சனத்தை சக போட்டியாளர்களே வைத்து வரும் நிலையில், இந்த ஆண்டாவது பிக் பாஸ் சுவாரஸ்யமா இருக்குமா பாஸ் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











