twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்தார்னா எல்லாரும் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்காங்க அதோட அர்த்தமே வேற... நடிகர் கார்த்தி விளக்கம்

    |

    சென்னை: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் திரைப்படம் இன்று வெளியாகிறது.

    ஏற்கனவே அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது தற்சமயம் சர்தார் திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இத்திரைப்படத்தைப் பற்றி முற்றிலும் புதிதான செய்திகளை பேட்டி ஒன்றில் கொடுத்துள்ளார் கார்த்தி.

    சர்தார் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளேன். அதில் ஒன்று வயதான கதாபாத்திரம். வயதானகதாபாத்திரத்திற்கு நம் ஊரிலேயே நிறைய ரெஃபரன்ஸ்கள் இருக்கிறது. அது மட்டுமின்றி இருக்கவே இருக்கிறார் தலைவர் நாசர். அவருக்கு ஃபோன் கால் செய்து 50 வயதுகளில் எப்படி இருந்தீர்கள். இப்போது 60-களில் எப்படி இருக்கிறீர்கள் என்று வயது குறித்த நடை உடை பாவனைகளை கேட்டு தெரிந்து கொள்வேன். அப்பாவிடமும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார்.

    காசி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து சர்தார் படம் பார்த்த கார்த்தி.. சூப்பர் வரவேற்பு! காசி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து சர்தார் படம் பார்த்த கார்த்தி.. சூப்பர் வரவேற்பு!

    சர்தார்

    சர்தார்

    சர்தார் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளேன். அதில் ஒன்று வயதான கதாபாத்திரம். வயதானகதாபாத்திரத்திற்கு நம் ஊரிலேயே நிறைய ரெஃபரன்ஸ்கள் இருக்கிறது. அது மட்டுமின்றி இருக்கவே இருக்கிறார் தலைவர் நாசர். அவருக்கு ஃபோன் கால் செய்து 50 வயதுகளில் எப்படி இருந்தீர்கள். இப்போது 60-களில் எப்படி இருக்கிறீர்கள் என்று வயது குறித்த நடை உடை பாவனைகளை கேட்டு தெரிந்து கொள்வேன். அப்பாவிடமும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார்.

    3 கதாநாயகிகள்

    3 கதாநாயகிகள்

    இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மூவருமே சும்மா வந்து போவது போல் இல்லாமல் முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக லைலாவைச் சுற்றித்தான் இந்த படத்தின் கதையே நகரும். லைலா கடைசியாக அஜித்திற்கு ஜோடியாக பரமசிவன் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அஜித் நடித்த திருப்பதி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அவர் நடிக்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நடிகன் என்பதால் பாடல்

    நடிகன் என்பதால் பாடல்

    நான் துணை இயக்குநராக இருந்து வந்தவன். இருப்பினும் நடிப்பதை விட இயக்கம் கடினம். நடனம் ஆடுவது அதைவிட கடினம். எனக்கு நடனமாட பிடிக்கும், ஆனால் நான் ஆடுவது போல அது இருக்க வேண்டும். ஆடுவதை விட எளிதாக என்னால் பாட முடியும். இப்போது இரண்டு படங்களில் பாடியிருக்கிறேன். சர்தார் திரைப்படத்தில் கூட அந்த கதாபாத்திரம் அடிப்படையில் நாடக நடிகன் என்பதால் ஒரு பாடல் பாடியிருக்கிறேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார்.

    சர்தார் பட்டம்

    சர்தார் பட்டம்

    காற்று வெளியிடை படத்தில் நடிக்கும் பொழுது சில பைலட் ஃபைலட் ஆபீஸர்களை சந்தித்தேன். அவர்களுடைய பெயர்களை வைத்து எப்போதுமே அழைக்க மாட்டார்கள், கோட் நேம் தான் இருக்கும். உதாரணத்திற்கு பகிரதன் என்று பெயர் இருந்தால், பேகி என்றுதான் அழைப்பார்கள். சர்தார் என்றால் ஒரு இன மக்களை குறிப்பிடும் சர்தார் ஜி என்று நினைக்கிறார்கள். ஆனால், தளபதி என்பது எப்படி ஒரு பட்டமோ அதே போல சர்தார் என்பதும் ஒரு பட்டம். சர்தார் வல்லபாய் பட்டேல் என்று கூறுகிறோம், வல்லபாய் பட்டேல் சர்தாரா ஜி இனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று எடுத்துக்காட்டுடன் கார்த்தி விளக்கி இருக்கிறார்.

    English summary
    Directed by PS Mithran, Sardar starring actor Karthi is releasing today. Ponniyin's Selvan, which has already been released in his role, is running successfully, while Sardar has been released. In this case, Karthi has given about Sardar film in an interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X