இதுல இவ்வளவு விஷயம் இருக்கா...கோலிவுட்டின் லேட்டஸ்ட் டிரேட் மார்க் ஆன "மாறன்"

சென்னை : பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உண்டு. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சில பெயர்கள் பாப்புலராக இருக்கும். பெரும்பாலான படங்களில் வரும் கேரக்டர்களுக்கு ஒரே பெயர் வைக்கப்படும். இல்லையென்றால் படங்களுக்கு கேரக்டர்களின் பெயர் வைப்பார்கள்.

அப்படி பழைய எம்ஜிஆர், சிவாஜி படங்களில் செல்வம், முத்து, ராஜா, பாபு ஆகிய பெயர்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதிலும் செல்வம் சென்ற பெயர் வைத்த கேரக்டரில் நடிக்காத ஹீரோக்களே இருக்க முடியாது என்ற சொல்லலாம்.

அதை அப்படியே காப்பி அடித்து ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட ஹீரோக்களின் படங்களிலும் ராஜா, விஜய் போன்ற பெயர்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதிலும் எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களில் ஹீரோ பெயர் கண்டிப்பாக விஜய்யாக தான் இருக்கும்.

 மாறன் சென்டிமென்ட்டா

மாறன் சென்டிமென்ட்டா

அந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பெயராக மாறன் இருந்து வருகிறது. அப்படி மாறன் பெயர் பயன்படுத்தப்பட்ட படங்கள் ஹிட்டும் ஆகி வருகிறது. இதனால் சென்ட்டிமென்ட்டாக இந்த பெயரை பயன்படுத்துகிறார்களா என தெரியவில்லை.

 இத்தனை மாறன்களா

இத்தனை மாறன்களா

உதாரணமாக சொல்ல வேண்டுமானால் வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லன் டேனியல் பாலாஜியின் நண்பர் பெயர் இளமாறன். ஆனால் மாறன் என்றே அவரது பெயர் பயன்படுத்தப்பட்டது. காக்கிச் சட்டை படத்தில் சிவகார்த்திகேயனின் பெயர் மாறன்.

 அட ஆமாங்க

அட ஆமாங்க

மெர்சல் படத்தில் விஜய் பெயர் மாறன். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் பெயர் மாறன். அதைத் தொடர்ந்து மாதவன் நடித்த வெப்சீரிசிற்கு மாறா என பெயர் வைக்கப்பட்டது. சேதுபதி படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்த மாஸ்டர் ராகவன் முருகனின் பெயர் மாறன்.

 அனைத்துமே ஹிட் தான்

அனைத்துமே ஹிட் தான்

இப்படி ஹீரோக்களின் கேரக்டர்கள் அல்லது முக்கிய கேரக்டர்களுக்கு மாறன் என பெயர் வைக்கப்பட்டது. இப்படி மாறன் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அனைத்துமே ஹிட் ஆகி உள்ளன.

 மாறனான டி 43

மாறனான டி 43

தற்போது தனுஷ் நடிக்கும் டி 43 படத்திற்கு மாறன் என பெயரிடப்பட்டுள்ளது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்ட டி 43 படத்தின் ஃபஸ்ட்லுக்குடன் படத்தின் டைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.

 இது தான் அர்த்தமா

இது தான் அர்த்தமா

மாறன் என்ற பெயர் மன்மதனையும், பாண்டிய மன்னர்களையும் குறிப்பதாகும். அதனால் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு மாஸ் கட்டுவதற்காக இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் மாறன் என்ற பெயர் பயன்படுத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல.

 எம்ஜிஆருக்கும் அதே பெயர்

எம்ஜிஆருக்கும் அதே பெயர்

எம்ஜிஆர் காலத்திலேயே அவரின் பல படங்களில் மாறன் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படங்களும் செம ஹிட் ஆகி உள்ளன. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆரின் பெயர் மணிமாறன். ஆனால் அந்த படத்தில் மாறன் என்ற பெயரே அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X