»   »  தென்னிந்தியாவுக்கு வரும் மராட்டிய "சாய்ராட்"

தென்னிந்தியாவுக்கு வரும் மராட்டிய "சாய்ராட்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மராட்டிய மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சாய்ராட் படமானது, விரைவில் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் ரிங்கு ராஜ்குரு, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மராட்டி படம் சாய்ராட். சுமார் 4 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ. 100 கோடி அளவுக்கு வசூல் செய்து, மராட்டி மொழியில் அதிக வசூல் செய்த திரைப்படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Marathi blockbuster Sairat to have southern remakes

கலப்பு திருமணம், ஆணவக் கொலையைக் கதைக்களமாகக் கொண்ட இத்திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களிலும் நல்ல விமர்சனம் காணப்படுகிறது.

மொழிகளைத் தாண்டியும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய ராக்லைன் வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். இதற்கான ரீமேக் உரிமையையும் சாய்ராட் தயாரிப்பாளர்களிடமிருந்து அவர் பெற்றுள்ளார்.

தற்போது, நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில், தென்னிந்திய மொழிகளில் சாய்ராட் ரீமேக்கில் நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தெரிகிறது.

English summary
National award-winning filmmaker Nagaraj Manjule's Marathi drama Sairat, a doomed love story, has caught the attention of southern filmmakers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil