இன்பன் உதயநிதி படத்தை இயக்கப் போவது உறுதி.. மாரி செல்வராஜின் அடுத்த லைன் அப் இதுதான்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் புதிய ஓனராக மாறியுள்ள இன்பன் உதயநிதி தனுஷின் இட்லி கடை படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வேட்டை நடத்தவில்லை.

Mari Selvaraj confirms his next lineups and movie with Inban Udhayanidhi

இந்நிலையில், விரைவில் ஹீரோவாகவும் இன்பன் உதயநிதி நடிக்கப் போகிறார் என்றும் அந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மாரி செல்வராஜ்.

பைசன் டிரைலர்: கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை மற்றும் அவர் சந்தித்த சவால்களை மையமாக வைத்து பைசன் - காளமாடன் எனும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அந்த படத்தின் டிரைலர் நேற்று இரவு யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை சுமார் 3 மில்லியன் பேர் அந்த டிரைலரை பார்த்துள்ளனர். துருவ் விக்ரமின் நடிப்பு, அப்பாவை போல உடலை மாற்றுவது என கடுமையான உழைப்பை போட்டுள்ளார். டிரைலரில் வரும் வசனங்கள் எல்லாம் சிறப்பாக உள்ளது. காளமாடனாக பசுபதி ஆடுவதும் கபடிக்கே போகக் கூடாது என மகனிடம் சத்தியம் கேட்பது என அவர் மிரட்டியுள்ளார். மேலும், அமீர், லால், அனுபமா என அனைவரும் நடிப்பில் அசத்தியுள்ளனர்.

அடுத்து தனுஷ் படம் தான்: தனுஷை வைத்து ஏற்கனவே கர்ணன் எனும் தரமான சம்பவத்தை மாரி செல்வராஜ் செய்திருந்தார். மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக அறிவிப்பு போஸ்டர் வெளியானது. ஆனால், அந்த படம் எப்போது துவங்கும் என்றும் அதற்கு முன்னதாக இன்பன் உதயநிதியின் படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், அடுத்து தனுஷ் உடன் தான் படம் பண்ணுகிறேன் என்பதை ஓபனாக சொல்லிவிட்டார்.

இன்பன் உதயநிதியுடன் படம்: மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷ், இன்பன் உதயநிதி, கார்த்தி உடன் எல்லாம் படம் பண்ணப் போவதாக பேச்சுக்கள் அடிபடுகிறதே, அவர்களுடன் படம் சைன் பண்ணிட்டு ஸ்க்ரிப்ட் எழுதுவீங்களா? அல்லது கதை வைத்துக் கொண்டு படம் பண்ணுவீங்களா என்கிற கேள்வியை எழுப்ப, தன்னிடம் நிறைய கதைகள் உள்ளது என்றும் முன்பை விட இப்போ உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று அங்குள்ள கதைகளை பார்த்து படங்களை உருவாக்கலாம். வாழ்வியல் தானே சார் கதை, நீங்க சொன்ன லைன் அப்பில் உள்ளவர்களிடம் எல்லாம் கதை சொல்லி அவர்கள் சம்மதம் தெரிவித்த பின்னர் தான் படம் பண்ணுவேன். வெறுமனே சைன் பண்ணிட்டு யாருக்காகவும் கதை எழுத மாட்டேன் எனக் கூறியுள்ளார். இன்பன் உதயநிதியுடன் படம் பண்ணுவது குறித்த கேள்விக்கு மாரி செல்வராஜ் மறுப்பு சொல்லாமல், இப்படி பதில் அளித்த நிலையில், தனுஷ் படத்தை இன்பன் உதயநிதி படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போவது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X