Bison Box Office: தொடர்ந்து அதிகரிக்கும் வசூல்.. துருவ் விக்ரமின் முதல் அரைசதம்.. எகிறிய பைசன் வசூல்!

சென்னை: தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பைசன் - காளமாடன் திரைப்படத்துக்கு பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் படங்கள் பெரும் போட்டியாக அமைந்தன.

ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அந்த படம் வசூல் ரீதியாக சிறப்பாக ஓடவில்லை. டியூட் திரைப்படத்துக்கும் கலவையான விமர்சனங்கள் குவிந்தாலும், பிரதீப் ரங்கநாதனின் அட்டகாசமான நடிப்புக்காக அந்த படம் தீபாவளி விடுமுறையை பயன்படுத்தியே 100 கோடி வசூல் ஈட்டியது.

Mari Selvaraj s Bison movie 10 Days Box Office Collection Dhruv hits first Half Century

ஆனால், தமிழ்நாட்டில் டியூட் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்காமல் குறையத் தொடங்க, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் நாளுக்கு நாள் வசூல் வேட்டையாட தொடங்கிய நிலையில், 50 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அரை சதம் அடித்த துருவ்: இந்த ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் திரைப்படம் உலகளவில் ஒட்டுமொத்தமாக 63 கோடி ரூபாய் வசூல் அள்ளியதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அப்பாவை தொடர்ந்து மகன் துருவ் விக்ரமும் அரை சதத்தை இந்த ஆண்டு கடந்து விட்டார் என்றும் ஆனால், குறைந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய வசூல் சாதனையை துருவ் விக்ரம் படைத்துள்ளார் என்றும் கூறுகின்றனர். இதுதான் துருவ் விக்ரமின் முதல் 50 கோடி பாக்ஸ் ஆபீஸ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் லைஃப் டைம் வசூலையும் துருவின் பைசன் முந்துவது உறுதியாகியுள்ளது.

பைசன் அதிகாரப்பூர்வ வசூல்: 10 நாட்களில் பைசன் திரைப்படம் உலகளவில் 55 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாக மாரி செல்வராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நல்ல படத்தை தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்பதற்கு தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்று வருவதே சான்று என்கின்றனர். நல்ல படமாக உருவாக்காமல் என் படத்தை புறக்கணித்து விட்டார்கள், மக்கள் படத்தை பார்க்க விரும்பவில்லை என்று பேசுவது எல்லாம் சமாளிஃபிகேஷன் தான் என்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து தனுஷ் நடிக்கும் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X