»   »  விஷால்-ஸ்ரீதிவ்யாவின் 'மருது'... குடும்பத்துடன் பார்க்க முடியாது

விஷால்-ஸ்ரீதிவ்யாவின் 'மருது'... குடும்பத்துடன் பார்க்க முடியாது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷாலின் 'மருது' திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கியிருக்கும் படம் 'மருது'.விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.


வழக்கம்போல கிராமத்துப் பின்னணியில் இப்படத்தை முத்தையா இயக்கியிருக்கிறார். படத்தை வாங்கியிருக்கும் ஐங்கரன் நிறுவனம் மே 20 ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது.


Maruthu Gets U/A Certificate

இந்நிலையில் 'மருது' படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர்.'மருது' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, படத்தை தணிக்கை அதிகாரிகளுக்கு படக்குழு அனுப்பி வைத்தது.


இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் சண்டைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் யூ/ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றனர். மேலும் படத்தின் ஒருசில வசனங்களை நீக்கியிருப்பதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.


தணிக்கையில் யூ/ஏ சான்றிதழைப் பெற்றதன் மூலம் தமிழக அரசின் வரிவிலக்கை இப்படம் இழந்திருக்கிறது.


சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்திற்கு திருட்டு விசிடி வெளியானால், நான் எனது நண்பர்களுடன் இணைந்து களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பேன் என்று விஷால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Vishal's Maruthu Gets U/A Certificate from Censor Board.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil